click here

Friday, 20 January 2017

நான் இதையெல்லாம் கொடுக்கவேண்டும்- மருத்துவர்கள் பேச்சை கேட்காத லாரன்ஸ்

லாரன்ஸ் எல்லோருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர். இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக கலந்துக்கொண்டார்.
நேற்று உடல்நலம் முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மருத்துவர்கள் கண்டிப்பாக ஒரு வாரம் ஓய்வு எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதற்கு லாரன்ஸ் ‘போராட்ட களத்தில் நானும் இருக்க வேண்டும். அந்த மக்கள் முகங்களை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.
உணவு மற்றும் குடிநீர், கழிப்பறை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். போராட்டம் வெற்றிபெற்ற பிறகு வந்து ஒரு வாரம் சிகிச்சை எடுத்துக்கொள்கிறேன்’ என கூறி மீண்டும் மெரினா நோக்கி கிளம்பிவிட்டாராம்.

விஜய்யை தொடர்ந்து முகத்தை மூடி போராட்டத்தில் கலந்துக்கொண்ட மற்றொரு முன்னணி நடிகர்

இளைய தளபதி விஜய் இன்று அதிகாலை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக்கொண்டார். பலரும் அந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.
அவரை தொடர்ந்து பல நடிகர்கள் இந்த போராட்டத்தில் கலந்து வருகின்றனர், தற்போது நடிகர் கார்த்தி முகத்தை மறைத்துக்கொண்டு இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளார்.
கார்த்தி நேற்று நடிகர் சங்க உண்ணாவிரதத்தில் கூட தொடர்ந்து மணி நேரம் கலந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாராவுடன் நடிக்கவில்லை விஷால் மறுப்பு


கடந்த சில வருடங்களாகவே ஸ்டார் ஹீரோக்களுடன் ஜோடி போடுவதை தவிர்த்து ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார் நயன்தாரா. ஆனால் நடிகர் விஷாலுடன் மீண்டும் நயன்தாரா நடிக்க உள்ளதாக சமீபகாலமாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே இந்த ஜோடி சத்யம் படத்தில் கடந்த 2008ம் ஆண்டு இணைந்து நடித்திருந்தது. 

புதிய படத்தை பிரம்மம் பட இயக்குனரும், கமல்ஹாசனின் உதவியாளருமான சோகிரேட்ஸ் இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதுபற்றி விஷாலிடம் கேட்டபோது,’இதுபோன்ற செய்திகள் எங்கிருந்து வெளிவருகிறது என்று தெரியவில்லை. தற்போது துப்பறிவாளன், இரும்பு திரை, சண்டகோழி 2ம் பாகம் என 3 படங்கள் நடிக்க உள்ளேன். 

இதை தவிர்த்து வேறு புதிய படம் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை’ என்றார். இதற்கிடையில் விஷால் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்திருக்கிறார். அதில் தனக்கு தொலைபேசியில் அறிமுகம் இல்லாத சிலர் மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டிருக்கிறார்.

வயது அதிகமானால் கவலை இல்லை : ஸ்ரேயா ஹேப்பி

ஹீரோயின்கள் தங்கள் வயதை வெளியில் சொல்வதில்லை. பிறந்த தேதி, பிறந்த மாதத்தை சொன்னாலும் பிறந்த வருடத்தை சொல்வதில்லை. உண்மையான வயது தெரிந்தால் ரசிகர்களிடம் தங்களுக்குள்ள ஈர்ப்பு குறைந்துவிடும் என்ற எண்ணமும் இதற்கு காரணம். படங்களில்கூட மனைவி வேடங்களை தவிர்த்து காதலியாக மட்டுமே நடிக்க முயல்கின்றனர். குழந்தைக்கு அம்மாவாக நடிக்க கேட்டால் சில சமயம் வாய்ப்பையே உதறிவிட்டு நடிக்க மறுத்துவிடுகின்றனர். 

திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து ஓய்ந்தபிறகு மார்க்கெட் இழக்கும் நிலையில் மனைவி, அம்மா வேடங்களில் நடிக்க முன்வருகின்றனர். வயதான வேடங்களில் நடிப்பது பற்றி நடிகை ஸ்ரேயாவிடம் கேட்டபோது அவர் கூறியது: சினிமாவோடு வேறு எந்த தொழிலையும் ஒப்பிட முடியாது. 17 வயது முதல் நான் நடித்து வருகிறேன். இப்போது 34 வயதாகிறது. 

எந்தவயதாக இருந்தாலும் ஏன் 65 வயதானாலும் சினிமாவில் மட்டும்தான் நல்ல வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. அமிதாப்பச்சனுக்கு இந்த வயதிலும் அருமையான வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. இதே வேறு தொழிலாக இருந்தால் ஏதாவது செய்ய அனுமதிப்பார்களா என்பது சந்தேகமே. நடிகையாக இருப்பதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பதாகவே கருதுகிறேன்.
இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.

வறட்சியை பார்வையிட மத்திய குழு நாளை தமிழ்நாடு வருகை

வடகிழக்கு பருவ மழை பொய்த்து விட்டதால் தமிழ்நாட்டில் வறட்சி நிலவுகிறது. கடும் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. எனவே வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு மனு கொடுத்துள்ளது.

எனவே வறட்சியை பார்வையிட மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. இக்குழுவில் 9 பேர் இடம் பெற்றுள்ளனர். மத்திய வேளாண் அமைச்சக இணை செயலாளர் வசுதா மிஸ்ரா இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இக்குழு நாளை (21-ந்தேதி) தமிழ்நாடு வருகிறது. அவர்கள் சென்னையில் தலைமை செயலகத்தில் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்கின்றனர்.

அவர்களிடம் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும், அமைச்சர்களும் வறட்சி நிலவரம் குறித்து விரிவாக விளக்குகின்றனர். பின்னர் வேளாண்மை, நீர் ஆதாரங்கள் மற்றும் கிராமப்புற வளர்ச்சி உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் 4 குழுக்களாக பிரிந்து நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 மாவட்டங்களை பார்வையிடுகின்றனர். இவர்கள் 24-ந்தேதிவரை ஆய்வு நடத்துகின்றனர்.

வறட்சியால் ஏற்பட்ட பயிர் சேதம் மற்றும் தண்ணீர் பிரச்சனையை ஆய்வு செய்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 16,682 கிராமங்களில் 13,305 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றில் 1564 கிராமங்கள் 87 சதவீதம் பகுதிகளில் 50 சதவீதத்துக்கும் மேல், வறட்சி பாதித்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக கடந்த 10-ந்தேதி அறிவிக்கப்பட்டது.

மக்கள் விருப்பப்படி ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பேன்: தமிழக முதல்வர்

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், இந்த தடைக்கு மூலகாரணமாக இருந்த பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இரவு பகலாக போராடி வருகிறார்கள். 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமரிடம் இது தொடர்பாக கோரிக்கை மனு அளித்தார். அப்போது, ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்றவேண்டும் என்று வலியுறுத்தினார். 

பின்னர் சட்ட நிபுணர்களுடன் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அத்துடன், ஜல்லிக்கட்டு அவசர சட்ட வரைவு ஜனாதிபதி ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் விருப்பப்படி ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பேன் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

டெல்லியிலிருந்து இன்று சென்னை திரும்பிய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் "ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்த அவசர சட்டம் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அவசர சட்ட வரைவு இன்று மாலை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர் ஒப்புதல் பெற்று நாளை அல்லது நாளை மறுநாள் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும். 

வாடிவாசல் விரைவில் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும். மக்கள் விருப்பப்படி ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பேன்.ஜல்லிக்கட்டுக்கு தடை வர இனி வாய்ப்பில்லை. ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தால் அதனை நீக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.

ஜல்லிக்கட்டை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்ற இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் நாடெங்கும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாணும் தமிழகத்தில் இளைஞர்கள் ஏற்று நடத்தி வரும் போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, "ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை ஆகியவற்றை இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளது, திராவிட கலாச்சாரம் மற்றும் அதன் ஒருமைப்பாடு மீது நடத்தும் தாக்குதல். தென்னிந்தியாவில் இப்படித்தான் இது பார்க்கப்படுகிறது. பொள்ளாச்சியில் நான் படப்பிடிப்பில் இருக்கும்போது மக்கள் இதனால் காயப்பட்டிருப்பதை நான் கவனித்தேன்.

ஆந்திராவிலும் அவர்களது கலாச்சார நிகழ்வு தடைசெய்யப்பட்டிருப்பதில் வருத்தமளிப்பதை நான் சில அரசியல் கூட்டங்களில் கேட்டறிந்துள்ளேன். மிருகங்கள் வதை செய்யப்படுவதாகவே ஜல்லிக்கட்டு மற்றும் சேவல் சண்டை ஆகியவற்றை தடை செய்ததாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த கண்டிப்பான போக்கை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாட்டிறைச்சி பற்றி கணக்கெடுக்க வேண்டும்.

உலகிலேயே அதிக அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்வது இந்தியா தான். 2.4 மில்லியன் டன் மாட்டிறைச்சி மற்றும் கன்றுகள் இறைச்சியை 2015-ஆம் ஆண்டு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. அதே நேரத்தில் பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் 2 மற்றும் 1.5 டன் மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 5 பில்லியன் டாலர் வர்த்தகம் உள்ளது. இதில் ஒவ்வொரு வருடமும் 14 சதவிதம் வளர்ச்சி இருக்கிறது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அத்தகைய மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனத்தை வைத்திருப்பது இந்துக்கள், முஸ்லிம்கள் அல்ல.

2.4 மில்லியன் டன் இறைச்சிக்கு எத்தனை பசு, கன்று, எருமைகள் வெட்டப்பட்டிருக்கும் என நினைத்துப் பாருங்கள். நம் கண்ணில் படவில்லை என்பதால் மட்டும் இந்த மாதிரியான விஷயங்கள் மிருக வதை என்று எப்படி பேசப்படாமல் இருக்கிறது? இறைச்சிக்காக வெட்டப்படும் மிருகங்களை ஒப்பிடும்போது இதில் காயப்படும் மிருகங்களின் எண்ணிக்கை ஒன்றுமே இல்லை என்கிற போது, ஏன் மிருக வதை ஜல்லிக்கட்டுக்கு மட்டும் பொருந்த வேண்டும்?. 

இதே மிருக வதை சேவல் சண்டையை தடை செய்யவும் சொல்லப்பட்டது. இந்த விளையாட்டுக்கு மத ரீதியில் முக்கியத்துவம் இருக்கிறது. கயசூரா என்ற அரக்கனை கொலை செய்ய சேவல் வடிவில் வந்த சிவபெருமான் குக்குடேஸ்வரர் என்றழைக்கப்பட்டார். சேவல் சண்டை ஆந்திராவின் கலாச்சார அடையாளம். மிருக வதை சட்டத்தை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்திய அரசு விரும்பினால், இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிப் பண்ணைகளையும் தடை செய்ய வேண்டும். 

ஏதாவது ஒரு புள்ளியில் இந்த அறநெறி உணர்த்தும் மூடத்தனத்துக்கு நாம் எல்லை வகுக்க வேண்டும். இல்லையென்றால் நமது தேசத்தின் ஒருமைப்பாடை காப்பது மிகக் கடினம். ஜனசேனா கட்சி, ஜல்லிக்கட்டு மற்றும் சேவல் சண்டை மீதிருக்கும் தடையை உடனடியாக நீக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது" என்று தெரிவித்துள்ளார் பவன் கல்யாண். 

அஜித், சூர்யா, த்ரிஷா உட்பட நடிகர் சங்க போராட்டத்தில் திரண்ட நடிகர்கள் - செட் 2






மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய அஜித்

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் தான் இப்போது உள்ள கலைஞர்களுக்கு. இந்நிலையில் நடிகர் சங்கம் சார்பில் நடிகர்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் அஜித் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் இணைந்து நடிகர் சங்க போராட்டக் களத்திற்கு வந்துள்ளார்.

உண்மையான கதாநாயகர்கள் அவர்கள் தான், நாங்கள் இல்லை- நடிகர் சங்கம்

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு அனைத்து திரை நட்சத்திரங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதில் இன்று ஒருநாள் அமைதியான முறையில் நடிகர் சங்கம் சார்பாக உண்ணாவிரதம் இருக்கப்பட்டது.
இந்த உண்ணாவிரதத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா ஆகியோர் கலந்துக்கொண்டனர், மாலை 5 மணியளவில் இந்த உண்ணாவிரதம் முடிந்தது.
இதுக்குறித்து நாசர் கூறுகையில் ‘நடிகர் சங்கத்தில் யாரும் PETA உறுப்பினர்கள் இல்லை, மேலும் உண்மையான ஹீரோக்கள் 3 நாட்கள் வெயிலில் அமர்ந்திருக்கும் இளைஞர்கள் தான்.
நாங்கள் ஹீரோக்கள் இல்லை’ என்று நெகிழ்ச்சியாக கூறினார்.

மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய அஜித்

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் தான் இப்போது உள்ள கலைஞர்களுக்கு. இந்நிலையில் நடிகர் சங்கம் சார்பில் நடிகர்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் அஜித் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் இணைந்து நடிகர் சங்க போராட்டக் களத்திற்கு வந்துள்ளார்.

நடிகர் லாரன்ஸ் மிகவும் உடல்நலக்குறைவு

நடிகர் லாரன்ஸ் நல்ல நடிகர் என்பதை தாண்டி மிகவும் நல்ல மனிதர். இவர் கடந்த இரண்டு நாட்களாக மாணவர்கள் நடத்தும் ஜல்லிக்கட்டு அறப்போராட்டத்தில் கலந்துக்கொண்டார்.
இவருக்கு ஏற்கனவே உடல்நலம் முடியாமல் சிகிச்சை எடுத்து வந்தார், இந்த இரண்டு நாட்களாக மாணவர்களுக்கு பல உதவிகளை செய்து வந்தார்.
தற்போது அவருக்கு மிகவும் உடல்நலம் முடியாததால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர், மேலும், சிகிச்சை முடிந்து மீண்டும் வருவேன் என்றும் கூற்யுள்ளாராம்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த விபரீதம், மாதவன் வருத்தம்

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு அறப்போராட்டம் நல்ல முறையில் நடந்து வருகின்றது. தற்போது வரை இளைஞர்கள் அமைதியான முறையில் போராடி வருகின்றனர்.
ஆனால், மதுரையில் ஒரு சிலர் இரயிலை மறிக்க, மிகவும் பரபரப்பானது, அப்போது மின்சாரம் தாக்கி 16 வயது இளைஞர் மின்சாரம் தாக்கியுள்ளது.
இதனால் இவர் உடல் கருக, இதை அறிந்த மாதவன் மிகவும் மனம் நொந்து சில கருத்துக்களை கூறியுள்ளார். இதோ..

நடிகர் என்பதையும் தாண்டி மக்களோடு மக்களாக இணைந்து சுத்தம் செய்த நடிகர்

அலங்காநல்லூரை தொடர்ந்து மெரினாவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இப்போது பெரிதாக வெடித்திருக்கிறது. மெரினாவில் நடக்கும் போராட்டத்தில் இளைஞர்கள் தாங்களாகவே சுத்தம் செய்கின்றனர், போலீஸ் அதிகாரிகளுக்கு உதவி வருகின்றனர்.
இதில் நடிகர் என்ற அடையாளத்தை தவிர்த்து இளைஞர்களோடு இணைந்து மஞ்சூர் அலிகான் சுத்தம் செய்துள்ளார்.
தற்போது அந்த வீடியோ சமூன வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ப்ளீஸ் நான் அப்படி இல்லை, பாவனா உருக்கம்

சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலம் பாவனா. இவர் சமீபத்தில் த்ரிஷாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
இதற்கு பலரும் தங்கள் கோபங்களை வெளிப்படுத்தினர், அதற்கு அவர் தற்போது உருக்கமாக பதில் அளித்துள்ளார்.
இதில் ‘நான் என்றுமே ஜல்லிக்கட்டிற்கு எதிரானவள் இல்லை, தமிழகத்தில் இருந்துக்கொண்டு எப்படி ஜல்லிக்கட்டை ஆதரிக்காமல் இருப்பேன்.
த்ரிஷா குடும்பத்தை மிகவும் தவறாக பேசினார்கள், அப்படி எல்லாம் பேச வேண்டாம் என்று தான் சொன்னேன்.
அதற்குள் என்னையும் சேர்த்து திட்ட ஆரம்பித்து விட்டார்கள்’ என மிகவும் மனம் நொந்து கூறியுள்ளார்.

ஒரு ஹீரோவுடன் நான் குடும்பம் நடத்தி யாருக்கும் தெரியாமல் குழந்தையே பெற்றுவிட்டேன், தீபிகா ஓபன் டாக்

தீபிகா படுகோன் தற்போது பால்வுட் தாண்டி ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். இவர் ஹாலிவுட் நடிகர் வின் டீசலுடன் XXX மூன்றாம் பாகத்தில் நடித்துள்ளார்.
இவர் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் வின் டீசலுடனே கலந்துக்கொண்டார், இந்தியாவில் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு பேட்டியில் ‘நானும் வின் டீசலும் யாருக்கும் தெரியால் குடும்பம் நடத்தி குழந்தையே பெற்றுவிட்டோம், ஆனால், இதெல்லாம் என் கற்பனையில் நடந்தது தான்’ என அவர் கூறியுள்ளார்.

Thursday, 19 January 2017

Ayngaran official Trailer | g.v. prakash.

Adangathey Movie Official Trailer | G.V.Prakash kumar | Sarathkumar.

Wednesday, 18 January 2017

ak 57 Movie Official Teaser #1 | ajith kumar

ak 57 Movie Official Teaser #1 | ajith kumar

Runningshaadi.com shooting spot (exclusive) | Amit Sadh | Taapsee Pannu

Runningshaadi.com Movie Official Tariler | Taapsee Pannu | Amit Sadh.

The Ghazi Attack Movie Shooting Spot (exclusive) | Rana Daggubati | Taap...

The Ghazi Attack Movie Shooting Spot (exclusive) | Rana Daggubati | Taap...

The Ghazi Attack Movie Official Trailer | Rana Daggubati | Taapsee Pannu.

Nagarvalam Movie Official Trailer | Bala Saravanan | Yogi Babu.

Nagarvalam Shooting Spot (exclusive) | Yogi Babu | Pasupathy.

Monday, 16 January 2017

Sivakarthikeyan Family videos (Exclusive) | Sivakarthikeyan Marriage vid...

Jomonte Suviseshangal Shooting Spot (exclusive) | Dulquer Salmaan | Aish...

Jomonte Suviseshangal Shooting Spot (exclusive) | Dulquer Salmaan | Aish...

Jomonte Suviseshangal Movie official Trailer | Dulquer Salmaan | Anupama...

OK JANU Movie videos songs |

Ok Jaanu Movie Review |

Ok Jaanu Movie Review |

Baadshaho Shooting Spot (exclusive) | Ajay Devgan | Aishwarya Rai | Ilea...

Baadshaho Movie Official Videos | Ajay Devgan | Aishwarya Rai | Ileana D...

Baadshaho Movie Official Taeser | Ajay Devgan | Ileana D'Cruz | Aishwary...

Badrinath Ki Dulhania Shooting Spot (exclusive) | Alia Bhatt | Varun Dha...

Badrinath Ki Dulhania Official Video | Alia Bhatt | Varun Dhawan | Gauha...

Badrinath Ki Dulhania Official Trailer | Alia Bhatt | Varun Dhawan | Gau...

Saturday, 14 January 2017

தமிழன் என்று சொல்ல நீங்கள் வெட்கப்பட வேண்டும்- த்ரிஷா ஆவேசம்

த்ரிஷா சமீப காலமாக அவர் தன் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் PETA அமைப்பின் விளம்பர தூதராக இருப்பதால், ரசிகர்களே இவர் ஜல்லிக்கட்டிற்கு எதிரானவர் என்று நினைத்துவிட்டார்கள்.
இதை தொடர்ந்து மிகவும் மோசமான வார்த்தைகளாலும், மீம்ஸுகளாலும் த்ரிஷாவை தாக்கினார்கள். நேற்று ஒரு படி மேலே சென்று இவர் நடிக்கும் கர்ஜனை படப்பிடிப்பையே நிறுத்தினார்கள்.
தற்போது பொறுமை இழந்த இவர் ‘பெண்களை மதிக்காமல் அவர்கள் குடும்பங்களையும் திட்டிக்கொண்டு, நீங்கள் தமிழன் என்று சொல்வதால் வெட்கப்பட வேண்டும்’ என்று கோபமாக டுவிட் செய்துள்ளார்.

இரட்டிப்பு மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தான் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. விஜய்யை தொடர்ந்து சூர்யாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் இவருக்கு இரட்டிப்பான மகிழ்ச்சியை இந்த பொங்கல் கொடுத்துள்ளது. ஆம், பைரவா படத்தின் பிரமாண்ட ரிலிஸ். இது மட்டுமின்றி ரெமோ படம் 100வது நாளை கடக்கின்றது.
இவை இரண்டிற்கும் நன்றி செலுத்தியது மட்டுமில்லாமல், அனைவருக்கும் தன் பொங்கல் வாழ்த்தையும் கூறியுள்ளார்.

Thursday, 12 January 2017

விஜய்யின் பைரவா படத்தால் போராட்டத்தில் இறங்கிய கேரள ரசிகர்கள்

விஜய்யின் பைரவா படம் உலகம் முழுவதும் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. ஆனால் கேரளாவில் மட்டும் விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்கள் நடுவில் பிரச்சனை இருப்பதால் சில கட்டுப்பாடுகளுடன் குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் பைரவா படம் வெளியாகி இருக்கிறது.
இதனால் வருத்தம் அடைந்த கேரள விஜய் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கேரளாவில் மொத்தம் 200 திரையரங்குகளில் மட்டும் தான் படம் ரிலீஸாகிறது.

Wednesday, 11 January 2017

துருவ நட்சத்திரதில்' 'துப்பறிவாளன்' நடிகை

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கவுள்ள 'துருவ நட்சத்திரம்' படத்தின் தகவல்கள் ஒவ்வொரு நாளும் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
 
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் நடிகை அனு இமானுவேல் நடிக்கவுள்ளார். இவர் இந்த படத்தின் நாயகி இல்லை என்றாலும் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் 'துப்பறிவாளன்' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த படத்தின் நாயகி கேரக்டருக்கு பிரபல நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்றும் படக்குழுவினர் கூறுகின்றனர்.
 
ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படத்தில் விக்ரம் 'ரா' ஏஜண்ட் கேரக்டரில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அமெரிக்கா, பிரிட்டன், துபாய், டெல்லி உள்பட பல லொகேஷன்களில் நடைபெறவுள்ளது

Sunday, 8 January 2017

தனுஷ் படங்களுக்கு ஏன் இசையமைப்பது இல்லை- பதிலளித்த அனிருத்

DNA கூட்டணி என்றாலே ஹிட் பாடல்களுக்கு குறைவே இருக்காது. தனுஷ், அனிருத் கூட்டணியில் வந்த பாடல்கள் அனைத்தும் செம ஹிட்.
ஆனால் இவர்கள் சில காலமாக ஒன்றாக இணைந்து வேலை செய்வது இல்லை. அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் இதுகுறித்து அனிருத் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, என் மேல் எனக்கே நம்பிக்கை இல்லாத போது என்னை நம்பியவர் தனுஷ். ஒருவருடனேயே அடுத்தடுத்து பணியாற்றினால் அதில் ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் இருக்காது. அதனால் ஒரு 4,5 படங்களுக்கு பிறகு வருங்காலத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்று கூறியுள்ளார்.

பைரவா எதிர்ப்பார்ப்பு- பிரபல திரையரங்கம் எடுத்த அதிரடி முடிவு

இன்னும் மூன்றே நாள் விஜய்யின் பைரவா படம் வெளியாக இருக்கிறது. ரசிகர்களும் படத்தை பல வகையில் கொண்டாடி மகிழ காத்துக் கொண்டிருக்கின்றனர்.
படத்தை பற்றி வரும் செய்திகள் அனைத்தும் உச்சகட்ட எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள Devi Complex, Devi, Devi Paradise, Devi Bala, Devi Kala என எல்லா திரையிலும் பைரவா படத்தை திரையிட முடிவு செய்துள்ளனர்.
ஒரு ஆங்கில படத்தின் ரிலீஸை கூட பைரவா படத்துக்காக ரத்து செய்துள்ளனர்

ரூ 100 கோடி பட்ஜெட்டில் தல அஜித்- அதிர்ந்த கோலிவுட்

அஜித்தின் படங்கள் சமீப காலமாக பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகின்றது. படத்திற்கு படம் வசூல் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.
இந்நிலையில் அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார், இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
முதலில் இப்படத்திற்கு ரூ 70 கோடி வரை பட்ஜெட் ஒதுக்கினார்களாம், தற்போது எடுத்த வரைக்கும் படத்தை பார்த்த தயாரிப்பாளர் செம்ம மகிழ்ச்சியில் உள்ளாராம்.
இதனால், ரூ 100 கோடி வரை பட்ஜெட்டை அதிகரித்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது, இந்த செய்தி உண்மையானால் அஜித்தின் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படம் இது தான்.

பைரவா புதிய சாதனை! இத்தனை நாடுகளில் வெளியாகிறதா?

விஜய்யின் பைரவா வெளிவர இன்னும் 4 நாட்கள் உள்ளன. படத்தை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பைரவா பெரிய அளவில் வெளிவரவுள்ளது. வழக்கமாக வெளிவரும் நாடுகளோடு சேர்த்து தற்போது சில புதிய நாடுகளிலும் பைரவா வெளிவரவுள்ளது.
நைஜீரியா, கானா, கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமின்றி ரஷ்யா, போலந்து போன்ற நாடுகளோடு சேர்த்து மொத்தம் 55 நாடுகளில் பைரவா வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வந்துள்ளது.
இதன் மூலம், நாடுகள் எண்ணிக்கையில் பைரவா புதிய சாதனை படைத்துள்ளது.

Wednesday, 4 January 2017

கோலிவுட்டில் அடுத்த கல்யாணம்! நடிகர் ஜெய், அஞ்சலி தயார்

கோலிவுட்டின் அடுத்த காதல் ஜோடி ஜெய் மற்றும் அஞ்சலி என்பது பலருக்கும் தெரியும். 3 வருடங்களாக காதலித்து வரும் இவர்கள் விரைவில் திருமணம் செய்யபோவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
தனது சித்தியின் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஹைதராபாத் சென்று தனியே வசித்து வந்த அஞ்சலி சில மாதங்களுக்கு முன் ஒன்று சேர்ந்தார்.
தற்போது தமிழில் மட்டும் ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் நடித்து வரும் இவர் ஜெய் நடிப்பில் வெளியாகவுள்ள எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் சிறு ரோலில் நடித்துள்ளார்.
இன்னிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக முடிவுசெய்துள்ளார்களாம்.

கீர்த்தி சுரேஷிற்காக விஜய் எடுக்கும் அவதாரம்- இது தான் பைரவா படத்தின் கதையா?

இளைய தளபதி விஜய் நடிப்பில் பைரவா பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளிவரவுள்ளது. தற்போது இப்படத்தின் கதை இது தான் என சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி உலா வருகின்றது.
இதில் கீர்த்தி சுரேஷை துரத்தி, துரத்தி காதலிக்கும் விஜய், ஜாலியாக டூயட் பாடி கலகலப்பாக தான் இருப்பாராம்.
ஆனால், கீர்த்தி தன் ஊரில் மெடிக்கல் காலேஜ் மாணவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை அரசாங்கத்திடம் சொல்ல முயற்சி செய்வாராம்.
அவரால், அது முடியாமல் போக, தன் காதலியின் பிரச்சனை, தன் பிரச்சனை என விஜய் அதை கையில் எடுத்து பிறகு ஆடும் ருத்ரதாண்டவமே பைரவா படத்தின் கதை என கூறப்படுகின்றது.

Tuesday, 3 January 2017

सलमान खान और करण जौहर की फिल्‍म में अक्षय कुमार होंगे हीरो, पहली बार आएगी यह तिकड़ी साथ

खास बातें

  1. सलमान और करण के जॉइंट प्रोडक्‍शन में बनेगी फिल्‍म
  2. इस फिल्‍म में नजर आएंगे अक्षय कुमार
  3. 2018 में आएगी यह फिल्‍म
नई दिल्‍ली: चाहे बॉलीवुड के तीनों सुपरस्‍टार खानों को पर्दे पर एक साथ देखना हो या फिर कुछ रीयल लाइफ कपल्‍स को फिल्‍मों में रोमांस करते हुए देखना हो, बॉलीवुड की कुछ जोड़‍ियां ऐसी हैं जिन्‍हें साथ देखने के लिए दर्शक लंबे समय से इंतजार कर रहे हैं. लेकिन हम आपके लिए एक ऐसी जोड़ी की खबर ला रहे हैं जो इससे पहले आपने कभी साथ नहीं देखी होगी. हिंदी सिनेमा के दो दिग्‍गज प्रोड्यूसर सलमान खान और करण जौहर पहली बार एक साथ प्रोड्यूसर्स की तरह नजर आने वाले हैं. इस जोड़ी में तड़के के रूम में आपको अक्षय कुमार भी दिखेंगे जो इस फिल्‍म के हीरो होंगे.

सलमान खान और करण जौहर के प्रोडक्‍शन में बनने वाली इस फिल्‍म के हीरो अक्षय होंगे लेकिन इसकी हीरोइन का खुलासा अभी नहीं हुआ है. जहां सलमान खान और अक्षय कुमार बॉलीवुड के सुपरस्‍टार हैं तो वहीं करण जौहर को सुपरहिट सिनेमा का मेकर माना जाता है. करण जौहर अपने धर्मा प्रोडक्‍शन के माध्‍यम से फिल्‍मों प्रोड्यूज कर ही रहे हैं और सललान खान ने प्रोडक्‍शन की शुरुआत फिल्‍म 'बजरंगी भाईजान' से की थी.

इस बात का खुलासा अक्षय कुमार और करण जौहर ने ट्वीट कर के किया है. अक्षय ने ट्वीट कर के जानकारी दी कि मेरे दो दोस्‍त सलमान खान और करण जौहर एक फिल्‍म के प्रोडक्‍शन के लिए साथ आ रहे हैं जिसमें मैं बतौर हीरो हूं. यह फिल्‍म 2018 में रिलीज होगी.' वहीं करण जौहर ने इसके बारे में ट्वीट करते हुए जानकारी दी कि इस फिल्‍म का डायरेक्‍शन अनुराग सिंह करने वाले हैं जो साल 2018 में रिलीज होगी. अनुराग इससे पहले कई पंजाबी हिट फिल्‍मों जैसे ' पंजाब 1984' और 'जाट एंड जूलियट' का निर्देशन कर चुके हैं.
 
Supremely excited to coproduce with @BeingSalmanKhan on a film starring @akshaykumar directed by Anurag Singh...releasing 2018!

इस फिल्‍म की घोषणा के बाद एक बात तो साफ है कि अक्षय कुमार आने वाले कुछ सालों में काफी व्‍यस्‍त रहने वाले हैं. इस साल की शुरुआत से ही अक्षय की फिल्‍म 'जॉली एलएलबी 2' रिलीज होने वाली है. इसके अलावा इस साल उनकी ' टॉयलेट एक प्रेम कथा' भी रिलीज हो रही है जिसमें उनके साथ भुमि पेडणेकर दिखाई देंगी.

 

इसके अलावा बॉलीवुड के 'खिलाड़ी कुमार', साउथ के सुपर‍स्‍टार रजनीकांत की फिल्‍म '2.0' में भी विलेन के तौर पर नजर आने वाले हैं. साथ ही अक्षय पत्‍नी ट्विंकल खन्‍ना के प्रोड्क्‍शन हाउस मिसेज फनीबॉन्‍स प्रोडक्‍शन की पहली फिल्‍म 'द पेड मैन' का भी हिस्‍सा हैं.