click here

Tuesday, 20 December 2016

தல அஜித்துக்காக 7 வருடங்களுக்கு ரீஎண்ட்ரி ஆகும் பிரபல பாடகர்


தல அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல்களை கம்போஸ் செய்யும் தீவிர பணியில் இசையமைப்பாளர் அனிருத் ஈடுபட்டு வருகிறார்

தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தின் ஒரு பாடலை மலேசியாவை சேர்ந்த பிரபல பாடகர், இசையமைப்பாளர் யோகி பி என்ற யோகேஸ்வரன் வீரசிங்கம் பாடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. யோகி பி, விஜய் நடித்த குருவி, தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' படப்பாடல்கள் உள்பட பல பாடல்கள் பாடியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' படத்தில் இடம்பெற்ற 'பூம் பூம் ரோபோ' பாடலுக்கு பின்னர் யோகி பி தமிழ் திரைப்படங்களில் பாடாத நிலையில் தற்போது ஏழு வருடங்களுக்கு பின்னர் 'தல 57' படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையில் அவர் ஒரு பாடலை பாடவுள்ளார்.

இந்த செய்தி வெளிவந்த ஒருசில நிமிடங்களில் யோகி பி, சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments