click here

Wednesday, 11 January 2017

துருவ நட்சத்திரதில்' 'துப்பறிவாளன்' நடிகை

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கவுள்ள 'துருவ நட்சத்திரம்' படத்தின் தகவல்கள் ஒவ்வொரு நாளும் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
 
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் நடிகை அனு இமானுவேல் நடிக்கவுள்ளார். இவர் இந்த படத்தின் நாயகி இல்லை என்றாலும் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் 'துப்பறிவாளன்' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த படத்தின் நாயகி கேரக்டருக்கு பிரபல நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்றும் படக்குழுவினர் கூறுகின்றனர்.
 
ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படத்தில் விக்ரம் 'ரா' ஏஜண்ட் கேரக்டரில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அமெரிக்கா, பிரிட்டன், துபாய், டெல்லி உள்பட பல லொகேஷன்களில் நடைபெறவுள்ளது

No comments:
Write comments