click here

Friday, 9 December 2016

ஷங்கரே புகழ்ந்து தள்ளிய படம், பிரபல இயக்குனர் சந்தோஷம்

ஷங்கர் 2.0 படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் செட் அமைத்து பிரமாண்டமாக எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ரிலிஸாகிய சென்னை-28 பார்ட் 2 படத்தை ஷங்கர் பார்த்துள்ளார், படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளிவிட்டார்.
இதனால் வெங்கட் பிரபு மட்டுமில்லாமல் படக்குழுவினர்களே மிகவும் சந்தோஷத்தில் உள்ளன

ஆர்த்தி-கணேஷ்க்குள் என்ன பிரச்சனை, விவாகரத்தானதா? மற்றொருமொரு ட்ரெண்டிங் செய்தி

ஆர்த்தி-கணேஷ் இந்த ஜோடியை தெரியாதவர்கள் யாருமே இல்லை. சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வந்து கலக்கியவர்கள்.
இவர்கள் இருவரும் திருமணம் செய்து நன்றாக தான் வாழ்ந்து வருகிறார்கள், ஆனால், அதற்குள் இருவரும் பிரிந்துவிட்டதாக ஒரு செய்தி உலா வந்தது, இவர்களுக்கு விவாகரத்தே ஆகிவிட்டது எனவும் செய்தி வந்தது.
இதை கேட்ட ஆர்த்தி ‘நாங்கள் இருவரும் கடந்த வாரம் கூட கோவிலுக்கு சென்று வந்தோம், சேர்ந்து போகும் போது யாரும் பார்க்க மாட்டார்கள்.
தனியாக செல்லும் போது தான் பார்த்து, கேட்பார்கள், நானும் ஆமங்க நாங்க தற்போது ஒன்றாக இல்லை என்று கூறிவிடுவேன்.
கடைசி வரை அவர்கள் நம்மை பற்றியே யோசித்து கொண்டிருப்பார்கள், மேலும், ட்ரெண்டிங் எல்லாம் வருகிறது, அதையும் ரசிக்கின்றேன், அங்களுக்குள் எப்போதும் விவாகரத்து இல்லை’ என்று சந்தோஷமாக கூறுகிறார்.

தேசிய விருது இயக்குனருடன் முதல்முறையாக இணையும் சிம்பு?


சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் ரூபாய் நோட்டு பிரச்சனையையும் தாண்டி நல்ல வசூலை பெற்றது. இந்நிலையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு, 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
 
இந்நிலையில் 'பிரேமம்' புகழ் அல்போன்ஸ்புத்திரன் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
பாலா தற்போது சிம்பு நடிக்கவுள்ள படத்தின் ஸ்கிரிப்ட் பணியில் உள்ளதாகவும், இந்த பணி முடிந்தவுடன் அடுத்த வருடம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. பாலாவுடன் சிம்பு முதன்முறையாக இணையும் இந்த படத்தின் எதிர்பார்ப்பு நிச்சயம் வேற லெவலில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சிவகார்த்திகேயன்-நயன்தாராவின் தமிழ்ப்புத்தாண்டு விருந்து

சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி தமிழ், மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
 
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் முதன்முதலாக நயன்தாரா ஜோடி சேருகிறார். 'ரெமோ' படத்தை தயாரித்த ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் பகத் பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா, ரோஹினி, தம்பிராமையா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
 
இந்த படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முறையான விரைவில் வெளிவரவுள்ளது. இந்த தகவல் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாராவின் ரசிகர்களுக்கு தமிழ்ப்புத்தாண்டு விருந்தாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே டிசம்பர் சிம்புவின் வாழ்வில் மறக்க முடியாத நாள்! ரசிகர்கள் ட்ரெண்டிங்


கடந்த வருடம் நடிகர் சிம்புவின் வாழ்வில் சில புயல் அடித்தது. அதில் ஒன்று தான் பீப் சாங். இவர் பாடினார் அதற்கு அனிருத் இசையமைத்தார் என இருவரின் மீது நீதிமன்ற வழக்குகள் பாய்ந்தன.
பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்க விஷயம் பெரிதானது. சிம்புவின் அப்பாவும். அம்மாவும் மீடியா முன் தோன்றி மகனுக்காக நிறைய பேசினார்கள்.
பின் அவர் சோர்ந்து போக சமீபத்தில் வந்த படங்கள் சிம்புக்கு தெம்பூட்டின. தற்போது பாடல் வெளியாகி ஒரு வருடம் ஆகப்போகிறது என இன்று சமூக வலை தளங்களில் ட்ரெண்ட் செய்துள்ளனர்.

வேற யாரையாவது வச்சு பண்ணுங்க! மறுப்பு தெரிவித்த ரஜினிகாந்த்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிசில் முதலிடத்தை பிடித்து வருகிறார். தற்போது அவர் ஷங்கர் இயக்கத்தில் அக்சய் குமார் எமிஜாக்ஸனுடன் 2.0 படத்தில் நடித்து வருகிறார்.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடித்துள்ள 'தங்கல்' படம் டிசம்பர் 23ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அமீர்கான் தனது மிக முக்கிய நண்பர்களுக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் படத்தை திரையிட்டு காட்டியுள்ளார்.
தற்போது ரஜினி அமீரிடம் படம் நன்றாக இருக்கிறது. சிறப்பாக உழைத்திருக்கிறீர்கள் என வாழ்த்தியுள்ளார்.
உடனே அமீர் தமிழில் இந்த படத்துக்கு நீங்கள் டப்பிங் பேச வேண்டும் என சொல்ல, ரஜினி என் குரல் சரியாக இருக்காது. நீங்கள் வேறு யாரையாவது வைத்து பேச வையுங்கள் கூறினார்.

இளையதளபதி இப்போது எங்கே இருக்கிறார் தெரியுமா?


இளையதளபதி விஜய்க்கு அடுத்ததாக வரும் ஜனவரி 14ல் பரதன் இயக்கத்தில் பைரவா படம் வெளிவரக்காத்திருக்கிறது.
கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்க, காமெடி நடிகர் சதீஸ் உடன் நடித்துள்ளார். வெளிநாடுகள், தமிழ்நாடு என ஷூட்டிங் முடிந்து தற்போது எடிட்டிங் பணிகள் தீவிரமாக நடக்கிறது.
இந்நிலையில் விஜய் தனித்து குடும்பத்தினருடன் லண்டன் புறப்பட்டு சென்றார். இந்த இடம் அவருக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அடிக்கடி அங்கு சென்றுவிடுவார்.
விரைவில் கிறிஸ்துமஸ் பண்டிகை வரப்போவதால் கொண்டாட்டத்தை அங்கேயே முடித்து விட்டு பின் அட்லீ படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு சில இயக்குனர்கள் இப்படி படம் எடுத்தால் தான் ரசிகர்கள் அதிகம் ரசிப்பார்கள், அவர்கள் அந்த ரூட்டில் இருந்து கொஞ்சம் விலகினாலும் எப்போது மீண்டும் அந்த ரூட்டிற்கு வருவார்கள் என ஆவல் தோன்றும், (read more)