click here

Friday, 9 December 2016

தேசிய விருது இயக்குனருடன் முதல்முறையாக இணையும் சிம்பு?


சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் ரூபாய் நோட்டு பிரச்சனையையும் தாண்டி நல்ல வசூலை பெற்றது. இந்நிலையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு, 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
 
இந்நிலையில் 'பிரேமம்' புகழ் அல்போன்ஸ்புத்திரன் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
பாலா தற்போது சிம்பு நடிக்கவுள்ள படத்தின் ஸ்கிரிப்ட் பணியில் உள்ளதாகவும், இந்த பணி முடிந்தவுடன் அடுத்த வருடம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. பாலாவுடன் சிம்பு முதன்முறையாக இணையும் இந்த படத்தின் எதிர்பார்ப்பு நிச்சயம் வேற லெவலில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

No comments:
Write comments