சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி தமிழ், மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் முதன்முதலாக நயன்தாரா ஜோடி சேருகிறார். 'ரெமோ' படத்தை தயாரித்த ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் பகத் பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா, ரோஹினி, தம்பிராமையா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முறையான விரைவில் வெளிவரவுள்ளது. இந்த தகவல் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாராவின் ரசிகர்களுக்கு தமிழ்ப்புத்தாண்டு விருந்தாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
|
Friday, 9 December 2016
சிவகார்த்திகேயன்-நயன்தாராவின் தமிழ்ப்புத்தாண்டு விருந்து
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Write comments