click here

Tuesday, 20 December 2016

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு படத்திற்கு பகவத் கீதை டைட்டில்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் பொங்கல் தினத்தில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு இருமொழிகளுக்கும் பொதுவான டைட்டிலை தேர்வு செய்ய படக்குழுவினர் முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்திற்கு 'சம்பவாமி' என்ற டைட்டில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறும் சம்பவாமி யுகே யுகே என்ற வரிகளில் இருந்து இந்த படத்தின் டைட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 'அதர்மம் தலைதூக்கும் போது நான் மீண்டும் அவதாரம் எடுப்பேன் என்ற பொருள் கூறும்ன் இந்த டைட்டில் படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்று படக்குழுவினர் கருதுகின்றனர்.

மகேஷ்பாபு, ராகுல் ப்ரித்திசிங், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். 

No comments:
Write comments