click here

Friday, 9 December 2016

என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்



சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஒருங்கே பெற்றவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது பிறந்தநாளை பண்டிகை போன்று அவரது ரசிகர்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி இவரது 66-வது பிறந்தநாளைக் கொண்டாட ரசிகர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். 

இன்னும் 2 தினங்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த ஆண்டு தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் பத்திரிகையாளர் சோ காலமானதையொட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று கூறியிருக்கிறார். பிறந்தநாளில் எந்த நிகழ்ச்சியையும் நடத்த வேண்டாம் என்றும் போஸ்டர்களை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுதொடர்பாக அனைத்து ரசிகர் மன்றங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா திங்கட்கிழமை காலமானார். பத்திரிகையாளர் சோ புதன்கிழமை மறைந்தார். இருவரின் உடல்களுக்கும் ரஜினி காந்த் இறுதி அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

சேலையில் இருக்கும் கவர்ச்சி வேறு எதிலும் இல்லை: காஜல் அகர்வால்



நடிகை காஜல் அகர்வால் இதுகுறித்து ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-

“அழகு என்பது நடிகைகளுக்கு அவசியம். அதற்காக தன்னை அழகுபடுத்துவதில் முழு நேரத்தையும் செலவிடுவது பிடிக்காது. இயற்கையான அழகை கொஞ்சம் மெருகேற்றி கவர்ச்சியாக தோன்றலாம். நான் நடிக்க வந்த ஆரம்பத்தில் ஒல்லியாக இருந்தேன். ஒவ்வொரு மொழிக்கும் தோற்றத்தில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்றார்கள்.

தமிழ் ரசிகர்களுக்கு குஷ்பு, ஹன்சிகா மாதிரி குண்டான நடிகைகளைத்தான் பிடிக்கும், தெலுங்கு ரசிகர்களுக்கு ஒல்லியாக இருக்க வேண்டும் என்று பயமுறுத்தினார்கள். குஷ்பு, ஹன்சிகாவுக்கு உடல் எடை கூடி இருந்ததால்தான் அவர்களுக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன என்றும் கூறினார்கள். எனக்கு குழப்பமாக இருந்தது.

ஒரு கட்டத்தில் யார் சொல்வதையும் கேட்க கூடாது. நான் நானாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். குண்டாகவோ ஒல்லியாகவோ என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை. கொஞ்சம் அழகை கூட்டுவதற்காக மட்டும் மெனக்கெட்டேன். இப்போது தமிழ், தெலுங்கு ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள்.

நீச்சல் உடை, டீசர்ட், ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிவதில்தான் கவர்ச்சி இருக்கிறது என்று சிலர் நினைக்கிறார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. சேலையில் இருக்கும் கவர்ச்சி வேறு எதிலும் இல்லை. சேலை கட்டிக்கொண்டு நடிப்பதற்கே எனக்கு பிடிக்கிறது. நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் சேலை கட்டி வருவதுபோல் ஏதாவது ஒரு காட்சி வையுங்கள் என்று டைரக்டர்களிடம் நிர்ப்பந்திக்கிறேன்.

அவர்களும் எனது விருப்பத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். ரசிகர்கள் நாகரிக உடையில் கவர்ச்சியாக வருவதையே விரும்புகிறார்கள் என்று ஒரு மாயையை உருவாக்கி வைத்துள்ளனர். நிஜத்தில் மாடர்ன் உடைகளை விட சேலை கட்டி நடிப்பதைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார். 

2000க்கு பிறகு பிரபல நடிகர்களின் படுதோல்வி படங்கள் லிஸ்ட்- ஸ்பெஷல்

ஒரு நடிகரின் மார்க்கெட் என்பது அவரின் முந்தைய படங்களின் வெற்றி, தோல்வி வைத்தே தீர்மாணிக்கப்படுகின்றது. இதில் ஒரு சில நடிகர்கள் மட்டும் தொடர் வெற்றிகளால் ரசிகர்கள் மட்டுமின்றி விநியோகஸ்தர்களுக்கும் செல்லப்பிள்ளையாக இருப்பார்கள். இந்நிலையில் 2000க்கு பிறகு எந்த நடிகர்கள் எத்தனை தோல்வி படங்களை கொடுத்துள்ளார்கள் என்பதை பார்ப்போம்.
ரஜினி
ரஜினி 2000 க்கு பிறகு 7 படங்களில் நடித்துள்ளார். இதில் குசேலன், கோச்சடையான், லிங்கா என 3 தோல்வி படங்களை கொடுத்துள்ளார்.
கமல்
கமல்ஹாசன் 2000க்கு பிறகு 17 படங்களில் நடித்துள்ளார், இதில் ஹேராம், ஆளவந்தான், அன்பே சிவம், முன்பை எக்ஸ்பிரஸ், மன்மதன் அம்பு, உத்தம வில்லன் ,தூங்கா வனம் என 7 தோல்வி படங்களை கொடுத்துள்ளார்.
விஜய்
இளைய தளபதி விஜய் 2000க்கு பிறகு தான் 32 படங்களில் நடித்துள்ளார், இதில் கண்ணுக்குள் நிலவு, தமிழன், பகவதி, புதிய கீதை, உதயா, ஆதி, அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா, புலி என 12 தோல்வி படங்களை கொடுத்துள்ளார்.
அஜித்
அஜித் 2000க்கு பிறகு 27 படங்கள் வரை நடித்துள்ளார், இதில் ரெட், ராஜா, என்னை தாலாட்ட வருவாளா, ஆஞ்சநேயா, ஜனா, ஜி, பரமசிவன், ஆழ்வார், ஏகன், அசல், பில்லா-2, கிரீடம் என 12 தோல்வி படங்களை கொடுத்துள்ளார்.
விக்ரம்
விக்ரம் 2000க்கு பிறகு 23 படங்களில் நடித்துள்ளார், இதில் விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமுராய், கிங், காதல் சடுகுடு, அருள், கந்தசாமி, ராவணன், ராஜபாட்டை, தாண்டவம், டேவிட், 10 எண்றதுக்குள்ள என 11 தோல்வி படங்கள் கொடுத்துள்ளார்.
சூர்யா
சூர்யா 2000க்கு பிறகு 25 படங்கள் நடித்துள்ளார், இதில் உயிரிலே கலந்து, நந்தா, ஸ்ரீ, ஆயுத எழுத்து, மாயாவி, மாற்றான், அஞ்சான், மாஸ் என 8 தோல்வி படங்களை கொடுத்துள்ளார்.
இவை அனைத்தும் இந்த நடிகர்கள் தமிழில் மட்டும் நடித்த படங்கள் மற்றும் கெஸ்ட் ரோல் அல்லாது ஹீரோவாக நடித்த படங்கள் மட்டுமே மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.

சொன்னதுக்கு மேலே'..செஞ்சிருக்கிங்க'..விஜய்யிடம் பாராட்டு பெற்ற இயக்குனர்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி இசை உள்பட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் பரதன் சமீபத்தில் வார இதழ் ஒன்றில் அளித்துள்ள பேட்டியில் பல புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அவற்றை தற்போது பார்ப்போம்
 
* விஜய் இந்த படத்தின் கதை முழுவதையும் இரண்டரை மணி கேட்டு அதன் பின்னர் அவர் 'ரொம்ப நல்லா இருக்கு, பண்றோம்' என்று கூறினார்
 
* 'பைரவா' படத்தை முழுவதையும் பார்த்த பின்னர் விஜய் என்னை கட்டிப்பிடித்து, 'சொன்னதுக்கு மேலே செஞ்சிருக்கிங்க' என்று பாராட்டினார்.
 
*கிளைமாக்ஸ் சண்டைகாட்சியை பார்த்தவுடன் உடனே அனல் அரசுவை அழைத்து அவரை பாராட்டினார். இந்த படத்தில் நான்கு சண்டைக்காட்சிகள் உள்ளன
 
* விஜய்யின் டான்ஸ், ஸ்டைல், வசன உச்சரிப்பு, ஆக்சன், காமெடி என அனைத்துமே சூப்பராக வந்துள்ளது. இந்த படம் விஜய் திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படம்
 
*இந்த படத்தில் இடம்பெற்ற 'பட்டையை கிளப்பு' பாடலுக்கு போடப்பட்ட செட்டும், கோயம்பேடு மார்க்கெட் போன்ற செட்டும் நிஜமானது போன்றே தோற்றம் அளிக்கும் வகையில் தத்ரூபமாக இருக்கும்
 
*இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நடனப்பயிற்சி கொடுத்துள்ளார்.

களவாணி 2' உண்மையா? இயக்குனர் சற்குணம் விளக்கம்

கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் சற்குணம் 'களவாணி' படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகம் ஆனார். இந்த படம் தந்த வெற்றியை அடுத்து அவர் 'வாகை சூடவா', 'நய்யாண்டி', 'சண்டிவீரன்' ஆகிய படங்களை இயக்கினார்.
 
மேலும் விமல், லட்சுமி மேனன் நடித்த 'மஞ்சப்பை' என்ற படத்தை தயாரித்த சற்குணம் தற்போது நயன்தாரா நடித்து வரும் 'டோரா' என்ற திகில் படத்தை தயாரித்து வருகிறார்.
 
இந்நிலையில் இயக்குனர் சற்குணம் தனது முதல் படமான 'களவாணி' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக ஒருசில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த செய்திக்கு சற்குணம் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
 
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 'என்னுடைய அடுத்தப்படமாக களவாணி இரண்டாம் பாகம் இயக்கபோவதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது, நான் அடுத்து நடிகர் மாதவன் அவர்களை வைத்து தான் அடுத்த படத்தை இயக்க போகிறேன் என்பதை ரசிகத்களுக்கும் அனைத்து மிடியா நண்பர்களுக்கும், இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய இயக்கத்தில் மற்றும் தயாரிப்பில் வரும் படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தாங்களுக்கு இத்தருணத்தில்  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' இவ்வாறு இயக்குனர் சற்குணம் தெரிவித்துள்ளார்.

அரவிந்தசாமிக்கு பாடல் எழுதிய இரண்டு தலைமுறை கவிஞர்கள்

கடந்த 90கள் மற்றும் 2000-ல் பிரபல நடிகராக இருந்த அரவிந்தசாமி 'தனி ஒருவன்' படத்தில் ரீஎண்ட்ரி ஆனார். இந்த படம் கொடுத்த சூப்பர் ஹிட் வெற்றி காரணமாக அவர் தற்போது 'போகன்' உள்பட ஒருசில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் ஜெயம் ரவியுடன் அரவிந்தசாமி நடித்த 'போகன்' படத்தின் பாடல்கள் இன்று வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்தின் டிராக்லிஸ்ட்டும் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தில் அரவிந்தசாமிக்காக கவிஞர் மதன்கார்க்கி 'கூடுவிட்டு' என்ற பாடலை எழுதியுள்ளார்.
 
கடந்த 90ஆம் ஆண்டுகளில் இதே அரவிந்தசாமிக்காக மதன்கார்க்கியின் தந்தை கவியரசு வைரமுத்து 'ரோஜா', 'பம்பாய்' உள்பட பல படங்களுக்கு பாடல்கள் எழுதிய நிலையில் தற்போது அரவிந்தசாமிக்காக வைரமுத்துவின் மகன் மதன்கார்க்கி பாடல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு தலைமுறை கவிஞர்கள் எழுதிய பாடல்களில் அரவிந்தசாமி நடித்துள்ளது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.
 
மேலும் கடந்த 1996ஆம் ஆண்டு 'இருவர்' படத்திற்காக வைரமுத்து எழுதிய 'உடல் மண்ணுக்காக' மற்றும் 'உன்னோடு நான் இருந்த' ஆகிய இரண்டு டிராக்குகளுக்கு வைரமுத்து குரல் கொடுத்துள்ளார். 20 வருடங்களுக்கு பின்னர் 'போகன்' படத்திற்காக மதன் கார்க்கி எழுதிய 'கூடுவிட்டு' என்ற பாடலுக்கும் அதே வைரமுத்து குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் 'பவர்பாண்டி' ரிலீஸ் தேதி அறிவிப்பு


தனுஷ் முதன்முதலில் இயக்கி வரும் 'பவர்பாண்டி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
 
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 'பவர்பாண்டி' திரைப்படம் வரும் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேத் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளிவரவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்று தற்போது இணணயதளங்களில் வெளியாகியுள்ளது.
 
ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயாசிங் டெல்லி கணேஷ், ரோபோசங்கர், வித்யூராமன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் தனுஷ், கவுதம் மேனன், மடோனா செபாஸ்டியன், டிடி என்ற திவ்யதர்ஷினி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகின்றனர். சீன்ரோல்டன் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.