click here

Friday, 9 December 2016

அரவிந்தசாமிக்கு பாடல் எழுதிய இரண்டு தலைமுறை கவிஞர்கள்

கடந்த 90கள் மற்றும் 2000-ல் பிரபல நடிகராக இருந்த அரவிந்தசாமி 'தனி ஒருவன்' படத்தில் ரீஎண்ட்ரி ஆனார். இந்த படம் கொடுத்த சூப்பர் ஹிட் வெற்றி காரணமாக அவர் தற்போது 'போகன்' உள்பட ஒருசில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் ஜெயம் ரவியுடன் அரவிந்தசாமி நடித்த 'போகன்' படத்தின் பாடல்கள் இன்று வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்தின் டிராக்லிஸ்ட்டும் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தில் அரவிந்தசாமிக்காக கவிஞர் மதன்கார்க்கி 'கூடுவிட்டு' என்ற பாடலை எழுதியுள்ளார்.
 
கடந்த 90ஆம் ஆண்டுகளில் இதே அரவிந்தசாமிக்காக மதன்கார்க்கியின் தந்தை கவியரசு வைரமுத்து 'ரோஜா', 'பம்பாய்' உள்பட பல படங்களுக்கு பாடல்கள் எழுதிய நிலையில் தற்போது அரவிந்தசாமிக்காக வைரமுத்துவின் மகன் மதன்கார்க்கி பாடல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு தலைமுறை கவிஞர்கள் எழுதிய பாடல்களில் அரவிந்தசாமி நடித்துள்ளது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.
 
மேலும் கடந்த 1996ஆம் ஆண்டு 'இருவர்' படத்திற்காக வைரமுத்து எழுதிய 'உடல் மண்ணுக்காக' மற்றும் 'உன்னோடு நான் இருந்த' ஆகிய இரண்டு டிராக்குகளுக்கு வைரமுத்து குரல் கொடுத்துள்ளார். 20 வருடங்களுக்கு பின்னர் 'போகன்' படத்திற்காக மதன் கார்க்கி எழுதிய 'கூடுவிட்டு' என்ற பாடலுக்கும் அதே வைரமுத்து குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments