click here

Friday, 9 December 2016

சேலையில் இருக்கும் கவர்ச்சி வேறு எதிலும் இல்லை: காஜல் அகர்வால்



நடிகை காஜல் அகர்வால் இதுகுறித்து ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-

“அழகு என்பது நடிகைகளுக்கு அவசியம். அதற்காக தன்னை அழகுபடுத்துவதில் முழு நேரத்தையும் செலவிடுவது பிடிக்காது. இயற்கையான அழகை கொஞ்சம் மெருகேற்றி கவர்ச்சியாக தோன்றலாம். நான் நடிக்க வந்த ஆரம்பத்தில் ஒல்லியாக இருந்தேன். ஒவ்வொரு மொழிக்கும் தோற்றத்தில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்றார்கள்.

தமிழ் ரசிகர்களுக்கு குஷ்பு, ஹன்சிகா மாதிரி குண்டான நடிகைகளைத்தான் பிடிக்கும், தெலுங்கு ரசிகர்களுக்கு ஒல்லியாக இருக்க வேண்டும் என்று பயமுறுத்தினார்கள். குஷ்பு, ஹன்சிகாவுக்கு உடல் எடை கூடி இருந்ததால்தான் அவர்களுக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன என்றும் கூறினார்கள். எனக்கு குழப்பமாக இருந்தது.

ஒரு கட்டத்தில் யார் சொல்வதையும் கேட்க கூடாது. நான் நானாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். குண்டாகவோ ஒல்லியாகவோ என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை. கொஞ்சம் அழகை கூட்டுவதற்காக மட்டும் மெனக்கெட்டேன். இப்போது தமிழ், தெலுங்கு ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள்.

நீச்சல் உடை, டீசர்ட், ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிவதில்தான் கவர்ச்சி இருக்கிறது என்று சிலர் நினைக்கிறார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. சேலையில் இருக்கும் கவர்ச்சி வேறு எதிலும் இல்லை. சேலை கட்டிக்கொண்டு நடிப்பதற்கே எனக்கு பிடிக்கிறது. நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் சேலை கட்டி வருவதுபோல் ஏதாவது ஒரு காட்சி வையுங்கள் என்று டைரக்டர்களிடம் நிர்ப்பந்திக்கிறேன்.

அவர்களும் எனது விருப்பத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். ரசிகர்கள் நாகரிக உடையில் கவர்ச்சியாக வருவதையே விரும்புகிறார்கள் என்று ஒரு மாயையை உருவாக்கி வைத்துள்ளனர். நிஜத்தில் மாடர்ன் உடைகளை விட சேலை கட்டி நடிப்பதைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார். 

No comments:
Write comments