
பாக்யராஜ் மகன் சாந்தனு, ஹீரோ. இதன் ஆடியோ விழாவை பாக்யராஜிக்கு நன்றி செலுத்தும் விழாவாக நடத்தினார். இருவருக்கும் குருவான பாரதிராஜா பங்கேற்றார். 10 அடி நீளமுள்ள மரத்தாலான பேனா பாக்யராஜிக்கு பரிசளிக்கப்பட்டது. பின்னர் பார்த்திபன் பேசும்போது ‘பாக்யராஜ் சார் மீண்டும் இயக்குனராகி படம் இயக்க வேண்டும் என்பது என் ஆசை.
நான் தயாரிக்கும் அடுத்த படத்தை அவர்தான் இயக்க உள்ளார். சாந்தனு ஹீரோவாக நடிக்கிறார். சிறந்த நடிகருக்கான எல்லா தகுதியும் சாந்தனுவிடம் இருக்கிறது. ஆனால் சிலவற்றை நிரப்ப வேண்டும். அந்த வேலையை கோடிட்ட இடங்கள் நிரப்புக படம் நிரப்பும்’ என்றார். மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார் பாக்யராஜ். அடுத்த ஆண்டில் இயக்குனர், வில்லன் என இருதோற்றத்திலும் பாக்யராஜை எதிர்பார்க்கலாம்.
No comments:
Write comments