click here

Saturday, 10 December 2016

மல்லுவுட் ஹீரோயின்களுடன் மல்லுகட்டும் திரிஷா

நயன்தாரா, அமலா பால், லட்சுமி மேனன், கீர்த்தி சுரேஷ் என வரிசையாக மல்லுவுட் நாயகிகள் கோலிவுட்டில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் போட்டிகளை எதிர்கொண்டு தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கிறார் திரிஷா. நீண்ட நாட்களாகவே மலையாள படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தபோதும் பொருத்தமான கதை அமையாததால் காத்திருந்தார். தமிழ், தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். 

ஒயிட் மலையாள படத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது. அதை ஏற்காமல் தள்ளிப்போட்டு வந்தார். பிறகு அந்த வாய்ப்பு ஹியுமா குரேஷிக்கு சென்றது. சீனியர் நடிகர்களுடன் ேஜாடி போட்டால் அடுத்தடுத்து வரும் வாய்ப்புகளும் அதேபாணியில் அமைந்துவிடும் என்பதால் மவுனம் காத்தார். தற்போது எதிர்பார்ப்புக்கு ஏற்ப இளம் ஹீரோவுடன் ஜோடிபோட வாய்ப்பு வந்திருக்கிறது. தமிழில் நேரம் படத்தில் நடித்தவர் நிவின் பாலே. 

மலையாளத்தில் பிரேமம் உள்ளிட்ட பல ஹிட் படங்களை அளித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவருடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது. அதை விடாமல் இறுக்கமாக பிடித்துக்கொண்டார் திரிஷா. ஹே ஜூடு என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஷியாம் பிரசாத் இயக்குகிறார். தமிழில் நடிக்க வந்த மல்லுவுட் நடிகைகளுடன் மல்லு கட்டிக்கொண்டிருந்த திரிஷா இப்படம் மூலம் நேரடியாக மல்லுவுட்டில் நடித்து வரும் நடிகைகளுடன் போட்டி களத்தில் குதித்திருக்கிறார்.

No comments:
Write comments