click here

Sunday, 11 December 2016

விஜய்யா, ரஜினியா? இந்த வருடம் யார் முதலிடம்- வெளிவந்த ரிசல்ட் இதோ

2016 முடிய இன்னும் 20 நாட்கள் கூட இல்லை. இந்த வருடமும் தமிழ் சினிமாவிற்கு பெரிதும் சொல்லும்படி வெற்றிப்படங்கள் வரவில்லை.
அஜித், கமல் படங்களை தவிர மற்ற நடிகர்கள் படங்கள் அனைத்தும் திரைக்கு வந்தது.
இதில் பலரும் எதிர்ப்பார்த்த படம் என்றால் கபாலி, தெறி தான். இந்நிலையில் இந்த வருடம் யார் வசூல் கிங் என்பதை விநியோகஸ்தர்கள் தரப்பில் வந்த தகவல்கள் இதோ..
தமிழகத்தை பொறுத்தவரை கபாலி பல கோடி வசூல் செய்தாலும் படம் அதிக தொகைக்கு வாங்கியதால் குறிப்பிட்ட அளவு நஷ்டத்தையும் சந்தித்துள்ளது. ஆனால், தெறி திரையிட்ட அனைத்து இடங்களிலும் வசூல் மழை தான்.
அதேபோல் கேரளாவை பொறுத்தவரை தெறி தான் கபாலியை விட அதிக வசூல், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இரண்டு படங்களுமே எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.
வெளிநாடுகளில் ப்ரான்ஸ், UK வில் தெறி தான் அதிக வசூல், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அரபுநாடுகளில் கபாலி ராஜ்ஜியம் தான். இந்த வசூல் விவரங்கள், விற்ற தொகை இதையெல்லாம் வைத்து பார்க்கையில் தெறி விஜய்யே முன்னுக்கு வருகிறார்.

No comments:
Write comments