click here

Saturday, 31 December 2016

விஜய், அட்லீ படத்தின் வில்லன் இவரா- ரசிகர்கள் ஆர்வம்

விஜய்யின் 60வது படமான பைரவா வரும் பொங்கலுக்கு ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து விஜய், அட்லீ இயக்கத்திலேயே மறுபடியும் நடிக்க இருக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக எஸ். ஜே. சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
ஏற்கெனவே இப்படத்தில் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நாயகிகளாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் படக்குழு விஜய் தவிர மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை இன்னும் வெளியிடவில்லை.

Friday, 30 December 2016

இந்த வருடம் மலேசியாவில் அதிகம் வசூல் செய்த படங்கள்

புது வருடம் வரப்போகிறது என்ற சந்தோஷம் அனைவருக்கும். இதன் நடுவில் எந்தெந்த படங்கள் இந்த வருடம் கலக்கியுள்ளது என தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.
தற்போது இந்த வருடம் மலேசிய பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய படங்களின் விவரத்தை பார்ப்போம்.
  • கபாலி
  • தெறி
  • இருமுகன்
  • 24
  • அரண்மனை2
  • ரெமோ
  • ரஜினி முருகன்
  • கொடி

பிரேமம் இயக்குனரின் அடுத்த தமிழ் படம்! சூப்பர்ஸ்டார் நடிக்கிறாரா?

நேரம், பிரேமம் என நிவின் பாலியை வைத்து இரண்டு வெற்றி படங்கள் கொடுத்தவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். இவர் அடுத்து பிரேமம் படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்யவுள்ளதாக இதற்கு முன் செய்தி வந்தது.
அது பற்றிய எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகாத நிலையில், தற்போது மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளதாக மலையாள சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
தமிழ், மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday, 28 December 2016

அனைவரும் எதிர்ப்பார்த்த பிரபல திரையரங்கில் இந்த வருடம் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட்

இந்த வருடம் எந்த படம் எத்தனை கோடி வசூல் செய்தது என்று தெரிந்துக்கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். அந்த வகையில் வருடா தோறும் திருநெல்வேலியில் உள்ள ராம் திரையரங்கில் இந்த வருடத்தில் எந்த படம் அதிகம் வசூல் செய்தது என்பதை டாப்-10ஆக வெளியிடும், அந்த லிஸ்ட் இதோ...
  1. தெறி, கபாலி
  2. இருமுகன்
  3. கொடி
  4. அச்சம் என்பது மடமையடா
  5. சேதுபதி
  6. கான்ஜுரிங்-2
  7. டங்கல்
  8. மிருதன்
  9. அரண்மனை-2
  10. மருது
மேலும் 24, இறுதிச்சுற்று, ரெமோ, ரஜினி முருகன் ஆகிய படங்களும் நல்ல வசூலை தந்தாக கூறியுள்ளனர்.

Saturday, 24 December 2016

ஜல்லிக்கட்டிற்கு எதிராக பேசிய ஆர்யா? ரசிகர்களின் கேள்விக்கு கொடுத்த அதிரடி விளக்கம்

ஆர்யா நேற்று டுவிட்டரில் ‘ஜல்லிக்கட்டு என்றால் என்ன?’ என கேட்டார். இவை பலருக்கும் கோபத்தை வரவைத்தது. இதை தொடர்ந்து அவரை பலரும் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதற்கு இன்று ஆர்யா விளக்கம் கொடுத்துள்ளார். இதில் ‘நான் ஜல்லிக்கட்டிற்கு எதிரானவர் இல்லை, என்னை டுவிட்டை சிலர் வேறு திசைக்கு கொண்டு செல்கின்றனர்.
நானும் ஜல்லிக்கட்டை ஆதரிக்கின்றேன்’ என கூறியுள்ளார்


விஷால் என்றாலே வெற்றி தான் சில காலங்களாக, ஆனால், இவை இவருடைய படங்களில் எதிர்ப்பார்க்க முடியாத(Read more)

இப்படி ஆகிவிட்டதே விஷால்- பலத்த வீழ்ச்சி

விஷால் என்றாலே வெற்றி தான் சில காலங்களாக, ஆனால், இவை இவருடைய படங்களில் எதிர்ப்பார்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
இவர் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த கதகளி, மருது ஆகிய இரண்டு படங்களுமே பெரும் தோல்வியை சந்தித்தது.
இதை தொடர்ந்து நேற்று வெளிவந்த கத்தி சண்டை ரசிகர்களிடம் மிகவும் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.
இப்படம் பெரும் தோல்வியை சந்திக்கும் என தற்போதே பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துவிட்டது.

Friday, 23 December 2016

ரசிகர்களை குறைவாக எடை போடக்கூடாது! ஷாருக்கான் உணர்ச்சி வசம்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சமீபத்தில் மும்பையில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.
இதில் அவர் மேடையில் பேசிய போது, நடிகர்கள் ரசிகர்களை மதிக்க வேண்டும். அவர்கள் நம் படத்தின் கதை கருவை எதிர்ப்பார்க்கிறார்கள்.
நம்முடைய படத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என குறைத்து மதிப்பீடு செய்யக்கூடாது. ரசிகர்களால் தான் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியும்.
உங்கள் முன் பேசும் போது பல விஷயங்களை சேகரித்து கொண்டு தான் பேசுகிறேன். மேடைக்கு பின்னால் இருக்கும் ரசிகர்களின் தயவு எனக்கு கிடைத்துள்ளது.
சினிமாவில் நிறைய ஆண்டுகள் பணியாற்றியதால் எனக்கு இந்த அனுபவம் கிடைத்துள்ளது என அவர் கூறினார்.
ஷாருக்கான் இந்த வருடம் பேன் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, 22 December 2016

Kajol to return to Tamil cinema after 20 years; will work with Dhanush and Soundarya

Kajol has signed another film. No, it is not the Anand Gandhi film produced by her husband Ajay Devgn. Apart from that, she has given her nod for her second Tamil film Velaiilla Pattadhari 2, 20 years after her last Rajiv Menon's musical Minsara Kanavu.

The effervescent actor will be seen sharing the screen space with the Tamil superstar Dhanush in the sequel to his 2014 entertainer directed by Velraj. However, the sequel will be directed by his sister-in-law Soundarya Rajinikanth who made her directorial debut with the epic Kochadaiiyaan which released in the same year.
Soundarya directed her father Rajinikanth in her debut film. It was only befitting that the Tamil superstar inaugrated the shooting of her next. The mahurat took place last week and was attended by the entire cast and crew of the film, barring Kajol who will start her shooting schedule soon.
Kajol was last seen in Rohit Shetty's family drama Dilwale last year. As far as Tamil cinema is concerned, her last was back in 1997 when she played an aspiring nun in Minsara Kanavu, sharing the screen space with Arvind Swamy and Prabhudeva.
Velaiilla Pattadhari 2 will see her in a prominent role, the details of which have not been revealed yet.
However, the film is sure to be a hit given the track record of its prequel, its director and its lead actor at the box office. As the icing on the cake, The Indian Express reports that it will be co-produced by S Thanu's V Creations and Wunderbar Films, the production house of Dhanush and his wife Aishwarya Rajinikanth.
Thanu's last production was Pa Ranjith's superhit gangster drama film earlier this year, Kabali.The Times of India reports that Amala Paul, Vivek, Saranya Ponvannan and Samuthrakani will reprise their roles from the first installment of the franchise

தல எத்தனை கிலோ எடையை குறைத்தார் தெரியுமா?

தல அஜித் படத்திற்கு படம் உடல் எடையை ஏற்றி, குறைத்து நடிப்பவர். அவருக்கு முதுகில் ஏற்பட்ட அறுவை சிகிச்சையால் உடல் எடையை பராமரிக்க முடியவில்லை என அவரே கூறியிருந்தார்.
இந்நிலையில் இவர் தற்போது நடித்து வரும் தல-57 படத்திற்காக 10 கிலோ எடை வரை குறைத்துள்ளாராம். மேலும், அதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
இப்படத்தின் படப்பிடிப்பு 80% முடிவடைந்து விட்டதாம், இந்த வாரமே படக்குழு சென்னை திரும்பவுள்ளது.

பைரவா பாடலை கிண்டல் செய்தவருக்கு பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு விஜய், அஜித் இருவரிடமும் நல்ல நட்பில் இருப்பவர். இந்நிலையில் நேற்று பைரவா பாடல் சரியில்லை என்று கூறியவரிடம் சண்டைக்கு சென்றார் பாடகர் அருண்ராஜ் காமராஜ்.
இதை நம் தளத்திலேயே கூறியிருந்தோம், மேலும், வெங்கட் பிரபு சார் இதை கொஞ்சம் பாருங்கள் என்று அருண் கூறினார்.
உடனே வெங்கட் பிரபு ‘சார் நம்ம மக்களுக்காக படம் பண்றோம், அவர்களுக்கு பிடிக்கும் சார்’ என்று அவர் ஸ்டைலில் பாடல் சரியில்லை என்று கூறியவருக்கு பதிலடி கொடுத்தார்.

Tuesday, 20 December 2016

தல அஜித்துக்காக 7 வருடங்களுக்கு ர ஜெயலலிதா குறித்து யுவனின் தைரிய& சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு திரையுலகினர்களும், அரசியல்வாதிகளும், நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களும் அனைத்துக்கும் மேலாக அவருடைய கோடானு கோடி ரசிகர்களும் காலை முதல் நேரிலும், தொலைபேசியிலும் சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில் பாரத பிரதமரும், ரஜினியின் மரியாதைக்குரியவர்களில் ஒருவருமான நரேந்திரமோடி தனது டுவிட்டரில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் ரஜினிகாந்த் வாழ தான் வாழ்த்துவதாக பிரதமர் தனது டுவீட்டில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பதை பார்த்தோம்.

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு படத்திற்கு பகவத் கீதை டைட்டில்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் பொங்கல் தினத்தில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு இருமொழிகளுக்கும் பொதுவான டைட்டிலை தேர்வு செய்ய படக்குழுவினர் முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்திற்கு 'சம்பவாமி' என்ற டைட்டில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறும் சம்பவாமி யுகே யுகே என்ற வரிகளில் இருந்து இந்த படத்தின் டைட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 'அதர்மம் தலைதூக்கும் போது நான் மீண்டும் அவதாரம் எடுப்பேன் என்ற பொருள் கூறும்ன் இந்த டைட்டில் படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்று படக்குழுவினர் கருதுகின்றனர்.

மகேஷ்பாபு, ராகுல் ப்ரித்திசிங், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். 

தல அஜித்துக்காக 7 வருடங்களுக்கு ரீஎண்ட்ரி ஆகும் பிரபல பாடகர்


தல அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல்களை கம்போஸ் செய்யும் தீவிர பணியில் இசையமைப்பாளர் அனிருத் ஈடுபட்டு வருகிறார்

தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தின் ஒரு பாடலை மலேசியாவை சேர்ந்த பிரபல பாடகர், இசையமைப்பாளர் யோகி பி என்ற யோகேஸ்வரன் வீரசிங்கம் பாடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. யோகி பி, விஜய் நடித்த குருவி, தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' படப்பாடல்கள் உள்பட பல பாடல்கள் பாடியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' படத்தில் இடம்பெற்ற 'பூம் பூம் ரோபோ' பாடலுக்கு பின்னர் யோகி பி தமிழ் திரைப்படங்களில் பாடாத நிலையில் தற்போது ஏழு வருடங்களுக்கு பின்னர் 'தல 57' படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையில் அவர் ஒரு பாடலை பாடவுள்ளார்.

இந்த செய்தி வெளிவந்த ஒருசில நிமிடங்களில் யோகி பி, சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷுடன் நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய், ஏன் தெரியுமா?

தனுஷ் தற்போது கோலிவுட் தாண்டி பாலிவுட்டிலும் கலக்கி வருகின்றார். இவர் அடுத்து விஐபி-2 படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் யாராவது பாலிவுட் பிரபல நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணினாராம், கிட்டத்தட்ட படையப்பா நீலாம்பரி போன்று நெகட்டிவ் கதாபாத்திரம் .
முதலில் இதற்கு ஐஸ்வர்யா ராயை தான் தனுஷ் அணுகியுள்ளார், அவர் முழுக்கதையும் கேட்ட பிறகு, வில்லியாக நடிக்க உடன்பாடில்லை என கூறிவிட்டாராம்.
இதன் பிறகே இந்த கதாபாத்திரம் கஜோலுக்கு வந்துள்ளது.

Monday, 19 December 2016

ரஜினியின் மன்னன் ரீமேக்காகிறது, யார் ஹீரோ தெரியுமா?

சூப்பர் ஸ்டார் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் மன்னன். இப்படத்தை பி.வாசு இயக்கியிருந்தார், தற்போது இவரே இந்த படத்தை ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளாராம்.
இதில் ரஜினியின் கதாபாத்திரத்தில் நடிக்க லாரன்ஸிடம் கவுண்டமணி கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலுவிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
மேலும், குஷ்பு, விஜயசாந்தி ரோலில் யார் நடிப்பார்கள் என்பதையும் விரைவில் பி.வாசுவே அறிவிப்பாராம்.

Friday, 16 December 2016

தனுஷின் VIP 2 படத்தில் சரண்யா பொன்வண்ணம் கதாபாத்திரம் என்ன?

தனுஷின் வெற்றிபடமான வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜை ரஜினி முன்னிலையில் ஆரம்பமானது.
இப்படத்தின் பூஜையில் முதல் பாகத்தில் இறந்த சரண்யா பொன்வண்ணம் கலந்து கொண்டிருந்தார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இரண்டாம் பாகத்தில் சரண்யா எப்படி வருவார் என பல கேள்விகள் எழுப்பினர். இந்நிலையில் சரண்யா இதுகுறித்து பேசும்போது, ஆமாம், நான் இந்த இரண்டாம் பாகத்தில் நடிக்கிறேன். அது எப்படி என்று யோசிப்பவர்கள் படம் வெளியாகும் வரை காத்திருக்கவும் என்று கூறியுள்ளார்.

Wednesday, 14 December 2016

Is the release date postponed for Christmas Releases?

The producers have decided to postpone the release date for the films scheduled to release for Christmas Holidays. Such a situation has arisen out of the dispute between theatres, producers and distributors on the issue of shares given to producers by theatres. 
The convention for quite some time is that to give 60% as profit share to producers by theatres screening films. Now the theatres have decided to cut short it by 50%. In the wake of such a situation a meeting happened at Kochi to discuss this, but it didn’t result in any amicable situation and thereby resulting in the decision of producers to postpone the releasing date. 
So many films of popular stars and directors were ready for release and even had declared the release dates but there is an impasse now regarding it. Sathyan Anthikad’s ‘Jomonte Suviseshangal’ with Dulquer Salmaan in the lead, director Siddique’s ‘Fukri’ with Jayasurya in the lead, Jibu Jacob’s ‘Munthirivallikal Thalirkkumbol’ with Mohanlal in the lead are some of the films scheduled for Christmas release.

டெஸ்ட்: சென்னை பிட்சில் உள்ள ஈரத்தன்மை எவ்வாறு அகற்றப்படுகிறது?


சென்னையில் திங்கள்கிழமை வீசிய வர்தா புயல் காரணமாக சென்னை சேப்பாக்கத்தின் ஆடுகளத்துக்கும், மைதானத்துக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், இதனால் இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் அங்கு உறுதியாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆடுகளத்தில் உள்ள ஈரத்தன்மையை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

இரு அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரின், 5-ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. வர்தா புயல் காரணமாக, சேப்பாக்கம் மைதானத்துக்கோ, ஆடுகளத்துக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
எனவே இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி அங்கு நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

புயலின் தாக்கத்தினால் மைதானத்தில் இருந்த காட்சித் திரைகள், ஏ.சி.க்கள் சேதமடைந்துள்ளன. அத்துடன் உயர் ஒளிவிளக்குகளில் இருந்து சில பல்புகள் வெடித்துச் சிதறியுள்ளன. இருப்பினும், அடுத்த இரண்டு நாள்களில் இவை அனைத்தும் உறுதியாக சீர்செய்யப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் நேற்று சென்னை வந்தடைந்தார்கள். பயிற்சி ஆடுகளங்கள் சேதமடைந்துள்ளதால் இன்று எந்த அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபடவில்லை.

இந்நிலையில் மைதானத்தின் ஆடுகளத்தில் உள்ள ஈரத்தன்மையைக் குறைப்பதற்காக பல்வேறுமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக (அடுப்பு) கரியை எரியவிட்டு பிட்சின்மீது வெப்பம் செலுத்தப்படுகிறது. இதனால் பிட்சின் ஈரத்தன்மை குறைந்து இயல்பு நிலைக்கு மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது

ராணாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாகுபலி இயக்குனர் ராஜமவுலி

பாகுபலி முதல் பாகம் ஏற்கனவே ரசிகர்களுக்கு பெரும் வியப்பை தந்துள்ளது. கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என ஒரு கேள்வியையும் விட்டுச்சென்றுள்ளது.
விடைக்காக ரசிகர்கள் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்நிலையில் இதில் பல்லால தேவனாக நடித்த ராணா தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
அவருக்கு மிகவும் அதிர்ச்சியூட்டும் விதமாக இன்று அப்படத்தின் இயக்குனர் ராணா போர்களத்தில் நிற்கும் காட்சியை ஸ்பெஷல் போஸ்டராக தயாரித்து, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியிட்டு அசத்தினர்.
இது ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

சூப்பர்ஸ்டாருக்கு பக்கத்தில் சமந்தாவுக்கு பேனர் வைத்த விஜய் ரசிகர்கள்!

நடிகை சமந்தா இன்று தமிழ், தெலுங்கு என கலக்கி வருபவர். இளைய தளபதி விஜய்யுடன் இவர் சமீபத்தில் தெறி படத்தில் நடித்தார்.
தற்போது அவரை விஜய் ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர். என்ன காரணம் எனில் சமந்தா, ஜீவா நடித்து வெளியான நீதானே என் பொன்வசந்தம் படம் 4 ஆவது வருடத்தை எட்டியுள்ளது.
இதை விஜய் ரசிகர்கள் சிலர் #4YearsOfNEP என ட்ரெண்ட் செய்துள்ளனர். இதில் நடித்த காமெடி நடிகர் வித்யுலேகாவும் இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேனர் பக்கத்தில் சமந்தாவின் புகைப்படங்கள் அடங்கிய பேனரை வைத்து கொண்டாடியுள்ளனர்.

Sunday, 11 December 2016

Happy Birthday Arya!!!

Today is the birthday of the handsome hunk of Kollywood Arya.
Arya debuted as an actor with director Jeeva's 'Ullam Ketkume' but director Vishnuvardhan's 'Ariundhum Ariyamalum' was the first film to hit the screen with Arya playing a pivotal role with shades of negativity.
This year is extra special for Arya as he has completed acting in 25 films in a career spanning 10 years. His 25th film 'Vasuvum Saravananum Onna Padichavanga' is also his production venture which as one of the hit films of the year.


Arya has acted in Telugu and Malayalam films and he has always been open to multi starrers and accept less important or second fiddle roles that every other commercial hero in the top league would never accept.
Personally Arya is characterized by uber coolness and highly friendly attitude and he has a  lot of friends in Kollywood. He is also a fitness freak and looks as young and fit as ever.
Indiaglitz wishes this talented and down to earth star a very Happy Birthday and lots and lots of achievements in the coming. 

சைனீஸ் படத்தில் தல அஜித்தா? ரசிகர்கள் கொண்டாட்டம்

கோலிவுட்டில் தற்போது வரும் படங்களில் கதை இருக்கின்றதோ, இல்லையோ அஜித் ரெபரன்ஸ் வந்துவிடுகின்றது. அந்த வகையில் தமிழை தாண்டி மலையாள படங்களில் அஜித் ரெபரன்ஸ் வர ஆரம்பித்தது.
தற்போது அதற்கும் ஒரு படி மேலே போய் சைனிஸ் படத்தில் தல அஜித் நடித்த என்னை அறிந்தால் போஸ்டர் இடம்பெற்றுள்ளது.
"I Love That Crazy Little Thing" என்ற சைனிஸ் படத்தின் ஒரு காட்சியில் என்னை அறிந்தால் போஸ்டர் இடம்பெற்றுள்ளது. இதோ இந்த ட்ரைலரில் 0.42 நொடியில் வலது பக்கம் பாருங்கள்....உங்களுக்கே தெரியும்

மறுபடியும் முதல்ல இருந்தா? டி.ஆர் முடிவால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

டி.ராஜேந்தர் தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கவண் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவர் வில்லனாக நடிக்கின்றார் என கிசுகிசுக்கப்படுகின்றது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் 2017ம் ஆண்டு இரண்டு படங்களை இயக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
அதில் ஒரு கதை கல்லூரி காதல் கதையாம், எப்படியும் இவை ஒரு சிலருக்கு இன்பமாகவும் மற்றும் சிலருக்கு அதிர்ச்சியாகவும் இருக்கலாம்.
டி.ஆர் கடைசியாக வீரச்சாமி படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யா, ரஜினியா? இந்த வருடம் யார் முதலிடம்- வெளிவந்த ரிசல்ட் இதோ

2016 முடிய இன்னும் 20 நாட்கள் கூட இல்லை. இந்த வருடமும் தமிழ் சினிமாவிற்கு பெரிதும் சொல்லும்படி வெற்றிப்படங்கள் வரவில்லை.
அஜித், கமல் படங்களை தவிர மற்ற நடிகர்கள் படங்கள் அனைத்தும் திரைக்கு வந்தது.
இதில் பலரும் எதிர்ப்பார்த்த படம் என்றால் கபாலி, தெறி தான். இந்நிலையில் இந்த வருடம் யார் வசூல் கிங் என்பதை விநியோகஸ்தர்கள் தரப்பில் வந்த தகவல்கள் இதோ..
தமிழகத்தை பொறுத்தவரை கபாலி பல கோடி வசூல் செய்தாலும் படம் அதிக தொகைக்கு வாங்கியதால் குறிப்பிட்ட அளவு நஷ்டத்தையும் சந்தித்துள்ளது. ஆனால், தெறி திரையிட்ட அனைத்து இடங்களிலும் வசூல் மழை தான்.
அதேபோல் கேரளாவை பொறுத்தவரை தெறி தான் கபாலியை விட அதிக வசூல், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இரண்டு படங்களுமே எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.
வெளிநாடுகளில் ப்ரான்ஸ், UK வில் தெறி தான் அதிக வசூல், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அரபுநாடுகளில் கபாலி ராஜ்ஜியம் தான். இந்த வசூல் விவரங்கள், விற்ற தொகை இதையெல்லாம் வைத்து பார்க்கையில் தெறி விஜய்யே முன்னுக்கு வருகிறார்.

Saturday, 10 December 2016

‘முத்துராமலிங்கம்’ படத்துக்காக இளையராஜா இசையில் கமல்ஹாசன் பாடினார்

நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம், ‘முத்துராமலிங்கம்.’ இதில், கவுதம் கார்த்திக்கின் தந்தையாக நெப்போலியன் நடிக்க, கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். இந்த படத்துக்காக, “தெற்கத்தி சிங்கமடா முத்துராமலிங்கம்” என்ற பாடலை இளையராஜா இசையில், கமல்ஹாசன் பாடியிருக்கிறார். இந்த பாடல் காட்சியில், கவுதம் கார்த்திக் நடித்தார். ராஜதுரை டைரக்டு செய்தார்.
‘முத்துராமலிங்கம்’ படத்தை பற்றி டைரக்டர் ராஜதுரை கூறுகிறார்:-

“கதாநாயகன் முத்துராமலிங்கத்தின் தந்தை சிலம்பம் கற்று தரும் பள்ளி நடத்தி வருபவர். ஒரு சூழ்நிலையில், திருநெல்வேலியில் சிலம்ப போட்டி நடக்கிறது. அதில் கதாநாயகனின் குழுவுக்கும், வில்லனின் குழுவுக்கும் மோதல் ஏற்படுகிறது. கதாநாயகனையும், அவருடைய தந்தையையும் போலீஸ் அதிகாரி கைது செய்ய முயற்சிக்கிறார்.

“கதாநாயகனுடன் சிலம்பம் ஆடி ஜெயித்தால் தாராளமாக கைது செய்யலாம்” என்று போலீஸ் அதிகாரியிடம் கதாநாயகி சவால் விடுகிறார். அந்த சவாலை போலீஸ் அதிகாரி ஏற்றுக் கொள்கிறார். சிலம்ப சண்டையில் வெற்றி யாருக்கு? என்பது கதை. ‘பெப்சி’ விஜயனும், வம்சி கிருஷ்ணாவும் வில்லன்களாக நடித்து இருக்கிறார்கள்.

விவேக், சுமன், சிங்கம்புலி, சிங்கமுத்து, சின்னி ஜெயந்த், ரேகா, விஜி சந்திரசேகரன் ஆகியோரும் நடித்துள்ளனர். குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்பில் டி.விஜய் பிரகாஷ் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.”

பைரவா படத்தில் விஜய்யின் அறிமுக காட்சி இப்படி தான் இருக்குமாம்- வெளியான சுவாரஸ்ய தகவல்


விஜய் ரசிகர்கள் பைரவா படத்தின் பாடல்களை தங்களது மொபைல் போனில் ரிங்டோனாக வைக்க ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் படத்தின் பாடல்கள் எப்போது வெளியாகும் என படக்குழு இதுவரை வெளியிடவில்லை.
இந்நிலையில் இப்படத்தில் விஜய்யின் அறிமுக காட்சி பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. பைரவா டிரைலரில் விஜய் சிரித்த முகத்தோடு, காதில் Earphones அணிந்து வரும் காட்சி தான் படத்தில் இடம்பெறும் அறிமுக காட்சியாம்.
இந்த தகவலை பைரவா பட டிசைனர் சத்யா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Gemini Ganeshanum Suruli Raajanum First Look | Atharvaa | Soori.HD

மல்லுவுட் ஹீரோயின்களுடன் மல்லுகட்டும் திரிஷா

நயன்தாரா, அமலா பால், லட்சுமி மேனன், கீர்த்தி சுரேஷ் என வரிசையாக மல்லுவுட் நாயகிகள் கோலிவுட்டில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் போட்டிகளை எதிர்கொண்டு தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கிறார் திரிஷா. நீண்ட நாட்களாகவே மலையாள படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தபோதும் பொருத்தமான கதை அமையாததால் காத்திருந்தார். தமிழ், தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். 

ஒயிட் மலையாள படத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது. அதை ஏற்காமல் தள்ளிப்போட்டு வந்தார். பிறகு அந்த வாய்ப்பு ஹியுமா குரேஷிக்கு சென்றது. சீனியர் நடிகர்களுடன் ேஜாடி போட்டால் அடுத்தடுத்து வரும் வாய்ப்புகளும் அதேபாணியில் அமைந்துவிடும் என்பதால் மவுனம் காத்தார். தற்போது எதிர்பார்ப்புக்கு ஏற்ப இளம் ஹீரோவுடன் ஜோடிபோட வாய்ப்பு வந்திருக்கிறது. தமிழில் நேரம் படத்தில் நடித்தவர் நிவின் பாலே. 

மலையாளத்தில் பிரேமம் உள்ளிட்ட பல ஹிட் படங்களை அளித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவருடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது. அதை விடாமல் இறுக்கமாக பிடித்துக்கொண்டார் திரிஷா. ஹே ஜூடு என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஷியாம் பிரசாத் இயக்குகிறார். தமிழில் நடிக்க வந்த மல்லுவுட் நடிகைகளுடன் மல்லு கட்டிக்கொண்டிருந்த திரிஷா இப்படம் மூலம் நேரடியாக மல்லுவுட்டில் நடித்து வரும் நடிகைகளுடன் போட்டி களத்தில் குதித்திருக்கிறார்.

Friday, 9 December 2016

இயக்குனர், வில்லனாக பாக்யராஜ் ரீ என்ட்ரி

நடிகர், இயக்குனராக 80, 90களில் பல்வேறு வெற்றி படங்களை தந்தவர் கே.பாக்யராஜ். முந்தானை முடிச்சி, புதியவார்ப்புகள், அந்த 7 நாட்கள் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாகவும், இயக்குனராகவும் மின்னியவர் கன்னிப்பருவத்திலே, விடியும் வரை காத்திரு படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். கடைசியாக 2010ம் ஆண்டு ‘சித்து பிளஸ் 2’ படம் இயக்கினார். பின்னர் குணசித்ர வேடங்களில் நடித்தார். சமீபத்தில் வாய்மை படத்தில் நடித்திருந்தார். பாக்யராஜ் சீடர் பார்த்திபன் தற்போது, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படம் இயக்கி வருகிறார். 

பாக்யராஜ் மகன் சாந்தனு, ஹீரோ. இதன் ஆடியோ விழாவை பாக்யராஜிக்கு நன்றி செலுத்தும் விழாவாக நடத்தினார். இருவருக்கும் குருவான பாரதிராஜா பங்கேற்றார். 10 அடி நீளமுள்ள மரத்தாலான பேனா பாக்யராஜிக்கு பரிசளிக்கப்பட்டது. பின்னர் பார்த்திபன் பேசும்போது ‘பாக்யராஜ் சார் மீண்டும் இயக்குனராகி படம் இயக்க வேண்டும் என்பது என் ஆசை. 

நான் தயாரிக்கும் அடுத்த படத்தை அவர்தான் இயக்க உள்ளார். சாந்தனு ஹீரோவாக நடிக்கிறார். சிறந்த நடிகருக்கான எல்லா தகுதியும் சாந்தனுவிடம் இருக்கிறது. ஆனால் சிலவற்றை நிரப்ப வேண்டும். அந்த வேலையை கோடிட்ட இடங்கள் நிரப்புக படம் நிரப்பும்’ என்றார். மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார் பாக்யராஜ். அடுத்த ஆண்டில் இயக்குனர், வில்லன் என இருதோற்றத்திலும் பாக்யராஜை எதிர்பார்க்கலாம்.

வருங்கால மனைவிக்கு கதை கேட்கும் இயக்குனர்

நயன நடிகையும் சிவமான இயக்குனரும் காதலர்களாக வலம் வருவது ஊர் அறிந்ததே. இவர்கள் இருவரும் தனிமையில் ஒரே வீட்டில் வசிப்பதாகவும், விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கோலிவுட்டில் அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இதுநாள் வரையில் இதுகுறித்து இருவருமே மௌனம் காத்து வருகிறார்கள்.

இந்நிலையில், முன்பெல்லாம் படங்களில் நடிக்க தனது அபிமானிகளிடம் கதைகளை பற்றி பேசி முடிவெடுத்து வந்த நயன நடிகை, இப்போது தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்கள் தன்னை தொடர்பு கொண்டாலே, முதலில் தனது காதல் இயக்குனரை போய் பாருங்கள் என்று அவர் பக்கம் திருப்பி விடுகிறாராம்.

அதனால், நயன நடிகையின் கால்ஷீட் வாங்க வருவோர் இயக்குனரைத்தான் துரத்திக் கொண்டு வருகிறார்களாம். இப்படி துரத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருப்பதால், ஏற்கெனவே கேட்கப்பட்ட கதைகள் இன்னும் பல கிடப்பில் இருப்பதாகவும், கைவசம் நயன நடிகைக்கு அதிக படங்கள் இருப்பதாலும் இந்த படங்களையெல்லாம் முடித்த பிறகுதான் நடிகையின் கால்ஷீட் கிடைக்கும் என இயக்குனர் அனைவரையும் திருப்பி அனுப்புகிறாராம்.

அப்படி அவர்களுக்கு கால்ஷீட் கொடுப்பதாக இருந்தாலும் அவர்கள் எதிர்பார்க்கும் தேதியில் கொடுக்க மாட்டாராம். அவர் முடிவு பண்ணும் தேதியில்தான் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என்று இயக்குனர் கண்டிஷன் போடுகிறாராம். இருப்பினும் நடிகையின் மார்க்கெட் கருதி பல இயக்குனர்கள் கதைகளை சொல்லிவிட்டு அவரது கால்ஷீட்டுக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்களாம்.

என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்



சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஒருங்கே பெற்றவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது பிறந்தநாளை பண்டிகை போன்று அவரது ரசிகர்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி இவரது 66-வது பிறந்தநாளைக் கொண்டாட ரசிகர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். 

இன்னும் 2 தினங்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த ஆண்டு தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் பத்திரிகையாளர் சோ காலமானதையொட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று கூறியிருக்கிறார். பிறந்தநாளில் எந்த நிகழ்ச்சியையும் நடத்த வேண்டாம் என்றும் போஸ்டர்களை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுதொடர்பாக அனைத்து ரசிகர் மன்றங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா திங்கட்கிழமை காலமானார். பத்திரிகையாளர் சோ புதன்கிழமை மறைந்தார். இருவரின் உடல்களுக்கும் ரஜினி காந்த் இறுதி அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

சேலையில் இருக்கும் கவர்ச்சி வேறு எதிலும் இல்லை: காஜல் அகர்வால்



நடிகை காஜல் அகர்வால் இதுகுறித்து ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-

“அழகு என்பது நடிகைகளுக்கு அவசியம். அதற்காக தன்னை அழகுபடுத்துவதில் முழு நேரத்தையும் செலவிடுவது பிடிக்காது. இயற்கையான அழகை கொஞ்சம் மெருகேற்றி கவர்ச்சியாக தோன்றலாம். நான் நடிக்க வந்த ஆரம்பத்தில் ஒல்லியாக இருந்தேன். ஒவ்வொரு மொழிக்கும் தோற்றத்தில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்றார்கள்.

தமிழ் ரசிகர்களுக்கு குஷ்பு, ஹன்சிகா மாதிரி குண்டான நடிகைகளைத்தான் பிடிக்கும், தெலுங்கு ரசிகர்களுக்கு ஒல்லியாக இருக்க வேண்டும் என்று பயமுறுத்தினார்கள். குஷ்பு, ஹன்சிகாவுக்கு உடல் எடை கூடி இருந்ததால்தான் அவர்களுக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன என்றும் கூறினார்கள். எனக்கு குழப்பமாக இருந்தது.

ஒரு கட்டத்தில் யார் சொல்வதையும் கேட்க கூடாது. நான் நானாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். குண்டாகவோ ஒல்லியாகவோ என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை. கொஞ்சம் அழகை கூட்டுவதற்காக மட்டும் மெனக்கெட்டேன். இப்போது தமிழ், தெலுங்கு ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள்.

நீச்சல் உடை, டீசர்ட், ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிவதில்தான் கவர்ச்சி இருக்கிறது என்று சிலர் நினைக்கிறார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. சேலையில் இருக்கும் கவர்ச்சி வேறு எதிலும் இல்லை. சேலை கட்டிக்கொண்டு நடிப்பதற்கே எனக்கு பிடிக்கிறது. நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் சேலை கட்டி வருவதுபோல் ஏதாவது ஒரு காட்சி வையுங்கள் என்று டைரக்டர்களிடம் நிர்ப்பந்திக்கிறேன்.

அவர்களும் எனது விருப்பத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். ரசிகர்கள் நாகரிக உடையில் கவர்ச்சியாக வருவதையே விரும்புகிறார்கள் என்று ஒரு மாயையை உருவாக்கி வைத்துள்ளனர். நிஜத்தில் மாடர்ன் உடைகளை விட சேலை கட்டி நடிப்பதைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார். 

2000க்கு பிறகு பிரபல நடிகர்களின் படுதோல்வி படங்கள் லிஸ்ட்- ஸ்பெஷல்

ஒரு நடிகரின் மார்க்கெட் என்பது அவரின் முந்தைய படங்களின் வெற்றி, தோல்வி வைத்தே தீர்மாணிக்கப்படுகின்றது. இதில் ஒரு சில நடிகர்கள் மட்டும் தொடர் வெற்றிகளால் ரசிகர்கள் மட்டுமின்றி விநியோகஸ்தர்களுக்கும் செல்லப்பிள்ளையாக இருப்பார்கள். இந்நிலையில் 2000க்கு பிறகு எந்த நடிகர்கள் எத்தனை தோல்வி படங்களை கொடுத்துள்ளார்கள் என்பதை பார்ப்போம்.
ரஜினி
ரஜினி 2000 க்கு பிறகு 7 படங்களில் நடித்துள்ளார். இதில் குசேலன், கோச்சடையான், லிங்கா என 3 தோல்வி படங்களை கொடுத்துள்ளார்.
கமல்
கமல்ஹாசன் 2000க்கு பிறகு 17 படங்களில் நடித்துள்ளார், இதில் ஹேராம், ஆளவந்தான், அன்பே சிவம், முன்பை எக்ஸ்பிரஸ், மன்மதன் அம்பு, உத்தம வில்லன் ,தூங்கா வனம் என 7 தோல்வி படங்களை கொடுத்துள்ளார்.
விஜய்
இளைய தளபதி விஜய் 2000க்கு பிறகு தான் 32 படங்களில் நடித்துள்ளார், இதில் கண்ணுக்குள் நிலவு, தமிழன், பகவதி, புதிய கீதை, உதயா, ஆதி, அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா, புலி என 12 தோல்வி படங்களை கொடுத்துள்ளார்.
அஜித்
அஜித் 2000க்கு பிறகு 27 படங்கள் வரை நடித்துள்ளார், இதில் ரெட், ராஜா, என்னை தாலாட்ட வருவாளா, ஆஞ்சநேயா, ஜனா, ஜி, பரமசிவன், ஆழ்வார், ஏகன், அசல், பில்லா-2, கிரீடம் என 12 தோல்வி படங்களை கொடுத்துள்ளார்.
விக்ரம்
விக்ரம் 2000க்கு பிறகு 23 படங்களில் நடித்துள்ளார், இதில் விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமுராய், கிங், காதல் சடுகுடு, அருள், கந்தசாமி, ராவணன், ராஜபாட்டை, தாண்டவம், டேவிட், 10 எண்றதுக்குள்ள என 11 தோல்வி படங்கள் கொடுத்துள்ளார்.
சூர்யா
சூர்யா 2000க்கு பிறகு 25 படங்கள் நடித்துள்ளார், இதில் உயிரிலே கலந்து, நந்தா, ஸ்ரீ, ஆயுத எழுத்து, மாயாவி, மாற்றான், அஞ்சான், மாஸ் என 8 தோல்வி படங்களை கொடுத்துள்ளார்.
இவை அனைத்தும் இந்த நடிகர்கள் தமிழில் மட்டும் நடித்த படங்கள் மற்றும் கெஸ்ட் ரோல் அல்லாது ஹீரோவாக நடித்த படங்கள் மட்டுமே மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.

சொன்னதுக்கு மேலே'..செஞ்சிருக்கிங்க'..விஜய்யிடம் பாராட்டு பெற்ற இயக்குனர்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி இசை உள்பட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் பரதன் சமீபத்தில் வார இதழ் ஒன்றில் அளித்துள்ள பேட்டியில் பல புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அவற்றை தற்போது பார்ப்போம்
 
* விஜய் இந்த படத்தின் கதை முழுவதையும் இரண்டரை மணி கேட்டு அதன் பின்னர் அவர் 'ரொம்ப நல்லா இருக்கு, பண்றோம்' என்று கூறினார்
 
* 'பைரவா' படத்தை முழுவதையும் பார்த்த பின்னர் விஜய் என்னை கட்டிப்பிடித்து, 'சொன்னதுக்கு மேலே செஞ்சிருக்கிங்க' என்று பாராட்டினார்.
 
*கிளைமாக்ஸ் சண்டைகாட்சியை பார்த்தவுடன் உடனே அனல் அரசுவை அழைத்து அவரை பாராட்டினார். இந்த படத்தில் நான்கு சண்டைக்காட்சிகள் உள்ளன
 
* விஜய்யின் டான்ஸ், ஸ்டைல், வசன உச்சரிப்பு, ஆக்சன், காமெடி என அனைத்துமே சூப்பராக வந்துள்ளது. இந்த படம் விஜய் திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படம்
 
*இந்த படத்தில் இடம்பெற்ற 'பட்டையை கிளப்பு' பாடலுக்கு போடப்பட்ட செட்டும், கோயம்பேடு மார்க்கெட் போன்ற செட்டும் நிஜமானது போன்றே தோற்றம் அளிக்கும் வகையில் தத்ரூபமாக இருக்கும்
 
*இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நடனப்பயிற்சி கொடுத்துள்ளார்.

களவாணி 2' உண்மையா? இயக்குனர் சற்குணம் விளக்கம்

கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் சற்குணம் 'களவாணி' படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகம் ஆனார். இந்த படம் தந்த வெற்றியை அடுத்து அவர் 'வாகை சூடவா', 'நய்யாண்டி', 'சண்டிவீரன்' ஆகிய படங்களை இயக்கினார்.
 
மேலும் விமல், லட்சுமி மேனன் நடித்த 'மஞ்சப்பை' என்ற படத்தை தயாரித்த சற்குணம் தற்போது நயன்தாரா நடித்து வரும் 'டோரா' என்ற திகில் படத்தை தயாரித்து வருகிறார்.
 
இந்நிலையில் இயக்குனர் சற்குணம் தனது முதல் படமான 'களவாணி' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக ஒருசில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த செய்திக்கு சற்குணம் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
 
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 'என்னுடைய அடுத்தப்படமாக களவாணி இரண்டாம் பாகம் இயக்கபோவதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது, நான் அடுத்து நடிகர் மாதவன் அவர்களை வைத்து தான் அடுத்த படத்தை இயக்க போகிறேன் என்பதை ரசிகத்களுக்கும் அனைத்து மிடியா நண்பர்களுக்கும், இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய இயக்கத்தில் மற்றும் தயாரிப்பில் வரும் படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தாங்களுக்கு இத்தருணத்தில்  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' இவ்வாறு இயக்குனர் சற்குணம் தெரிவித்துள்ளார்.

அரவிந்தசாமிக்கு பாடல் எழுதிய இரண்டு தலைமுறை கவிஞர்கள்

கடந்த 90கள் மற்றும் 2000-ல் பிரபல நடிகராக இருந்த அரவிந்தசாமி 'தனி ஒருவன்' படத்தில் ரீஎண்ட்ரி ஆனார். இந்த படம் கொடுத்த சூப்பர் ஹிட் வெற்றி காரணமாக அவர் தற்போது 'போகன்' உள்பட ஒருசில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் ஜெயம் ரவியுடன் அரவிந்தசாமி நடித்த 'போகன்' படத்தின் பாடல்கள் இன்று வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்தின் டிராக்லிஸ்ட்டும் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தில் அரவிந்தசாமிக்காக கவிஞர் மதன்கார்க்கி 'கூடுவிட்டு' என்ற பாடலை எழுதியுள்ளார்.
 
கடந்த 90ஆம் ஆண்டுகளில் இதே அரவிந்தசாமிக்காக மதன்கார்க்கியின் தந்தை கவியரசு வைரமுத்து 'ரோஜா', 'பம்பாய்' உள்பட பல படங்களுக்கு பாடல்கள் எழுதிய நிலையில் தற்போது அரவிந்தசாமிக்காக வைரமுத்துவின் மகன் மதன்கார்க்கி பாடல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு தலைமுறை கவிஞர்கள் எழுதிய பாடல்களில் அரவிந்தசாமி நடித்துள்ளது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.
 
மேலும் கடந்த 1996ஆம் ஆண்டு 'இருவர்' படத்திற்காக வைரமுத்து எழுதிய 'உடல் மண்ணுக்காக' மற்றும் 'உன்னோடு நான் இருந்த' ஆகிய இரண்டு டிராக்குகளுக்கு வைரமுத்து குரல் கொடுத்துள்ளார். 20 வருடங்களுக்கு பின்னர் 'போகன்' படத்திற்காக மதன் கார்க்கி எழுதிய 'கூடுவிட்டு' என்ற பாடலுக்கும் அதே வைரமுத்து குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் 'பவர்பாண்டி' ரிலீஸ் தேதி அறிவிப்பு


தனுஷ் முதன்முதலில் இயக்கி வரும் 'பவர்பாண்டி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
 
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 'பவர்பாண்டி' திரைப்படம் வரும் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேத் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளிவரவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்று தற்போது இணணயதளங்களில் வெளியாகியுள்ளது.
 
ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயாசிங் டெல்லி கணேஷ், ரோபோசங்கர், வித்யூராமன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் தனுஷ், கவுதம் மேனன், மடோனா செபாஸ்டியன், டிடி என்ற திவ்யதர்ஷினி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகின்றனர். சீன்ரோல்டன் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.